பொதுநலவாய மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் மாநாட்டிற்காக வெளிவிவகார செயலாளரின் ஐக்கிய இராச்சியத்திற்கான விஜயம்

பொதுநலவாய மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் மாநாட்டிற்காக வெளிவிவகார செயலாளரின் ஐக்கிய இராச்சியத்திற்கான விஜயம்

2024, அக்டோபரில் செமோவாவில் நடைபெறவுள்ள, பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிற்கு (CHOGM) முன்னதாக லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன, ஐக்கிய இராச்சியத்திற்கு, 2024 செப்டம்பர் 02 முதல் 06 வரையான   உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தில், வெளியுறவு செயலாளருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்துகொள்ளவுள்ளனர். இவ்விவிஜயத்தின் போது வெளிவிவகார செயலாளர், பொதுநலவாய நாடுகள்  மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 செப்டம்பர் 02

Please follow and like us:

Close