பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் 2018 ஆகஸ்ட் 1 முதல் 4 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் 2018 ஆகஸ்ட் 1 முதல் 4 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்

Secretary-General_Commanwealth

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கௌரவ பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 1ஆம் திகதி புதன்கிழமை, இலங்கை வரவுள்ளார். அவர் 2016 ஏப்பிரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி, செயலாளர் நாயகம்  பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ திலக் மாரபன அவர்களையும் சந்திக்க உள்ளார். ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள அவரது கூட்டங்கள் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், கௌரவ மலிக் சமரவிக்ரம; மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சர், கௌரவ பைசர் முஸ்தபா; இளைஞர் விவகார, திட்ட முகாமைத்துவ மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர்; கௌரவ சாகல ரத்நாயக; பொது நிர்வாகம், முகாமைத்துவம், சட்டம்  மற்றும் ஒழுங்கு அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் மந்தும பண்டார; கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம்; மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை உள்ளடக்கியிருக்கும்.  செயலாளர் நாயகத்தின் கூட்டங்களின் பிரதான நோக்கம் யாதெனில் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல் உட்பட, 2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய அரசாங்க தலைவர்களுடன் இலண்டனில்  இடம்பெற்ற கூட்டத்தில் (CHOGM) , உடன்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவதில் விரிவான ஆதரவையும் ஓத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில்  ஆய்வு செய்வதாகும்.

இந்த கலந்துரையாடல்கள் பொதுநலவாய நீலச் சாசனத்தினை நடைமுறைப்படுத்துவதனையும் உள்டளடக்கியிருக்கும். இச்சாசனத்தின் கீழ் காடுகளை மீட்டெடுத்தல் நோக்கிய பொதுநலவாயத்தின் முயற்சியை வழிநடத்துவதில் இலங்கை தலைமைத்துவம் வகிக்கும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

30 ஜூலை 2018

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close