பேங்கொக்கில் நடைபெற்ற 67வது வை.டப்ளிவ்.சி.ஏ. இராஜதந்திர தொண்டு சந்தை 2022 இல் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு

பேங்கொக்கில் நடைபெற்ற 67வது வை.டப்ளிவ்.சி.ஏ. இராஜதந்திர தொண்டு சந்தை 2022 இல் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு

 தாய்லாந்தில் இலங்கையின் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுவையூட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபை, தேசிய கைவினைப் பேரவை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, கைவினைப் பொருட்கள் சபை மற்றும் இலங்கைத் தேயிலை சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை, பேங்கொக்கில் நடைபெற்ற 67வது வை.டப்ளிவ்.சி.ஏ. இராஜதந்திர தொண்டு சந்தையில் 2022 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 02 வரை வெற்றிகரமாக  பங்கேற்றது.

இலங்கையின் தூதுவர் ஸ்டீபன் சேனாநாயக்கவின் மனைவி உட்பட பேங்கொக்கில் உள்ள தூதரகத் தலைவர்கள் தமது வாழ்க்கைத் துணைவர்களுடன் இணைந்து,37 தூதரகங்கள்  பேங்கொக்கின் வை.டப்ளிவ்.சி.ஏ. ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையில் பங்கேற்றன. இது மாட்சிமை தங்கிய  இளவரசி சோம்சவாலியின் பிரதிநிதியான மாட்சிமை தங்கிய டிகோம்போர்ன் யுகலாவால் திறந்து வைக்கப்பட்டது.

 சந்தையில் 177 சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன்,நான்கு நாட்களில் 14,000 பார்வையாளர்களை ஈர்த்தது. பங்குபெற்ற தூதரகங்களின் நன்கொடைகள், தாய்லாந்தில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், கல்வி, தொழில், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல அம்சங்களில்  சறுவர்கள், பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவியது.

சேனல் 3எச்.டி, சேனல் 7எச்.டி, சேனல் 5எச்.டி, தாய் பி.பி.எஸ். மற்றும் யூ டியூப் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் மூலம் நிகழ்வுக்கு முன்னதாக இலங்கையின் தயாரிப்புக்கள் தாய்லாந்தில்  விளம்பரப்படுத்தப்பட்டன. இலங்கைச் சாவடியில் சுவையூட்டிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், சிலோன் தேயிலை, உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பல பொருட்கள் தாய்லாந்து மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்த்தன.

சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் வாரியம், தேசிய கைவினைப் பேரவை, கைவினைப் பொருட்கள் சபை, அரோமேடிக் குளோபல் பிரைவேட் லிமிடெட், அமில ஃபுட்ஸ், சிலோன் ஸ்பைஸ் கார்ட் (பிரைவேட்) லிமிடெட், கெண்டில் ஹவுஸ் சிலோன், சி.என். செரமிக்,  டிஎன் இன்டீரியர் டிசைன்ஸ் (பிரைவேட்) லிமிடெட், தீபம், எர்த் நேச்சுரல் (பிரைவேட்) லிமிடெட், கிரீன்ஸ் ஃப்ளவர் டிசைன் (பிரைவேட்) லிமிடெட், ஹில்மா லங்கா (பிரைவேட்) லிமிடெட், ஹெரிடன்சி மெனுபெக்சரர்ஸ், ஹெமிரா செரமிக்ஸ், இரேஷா ஸ்பைஸ் லங்கா (பிரைவேட், லிமிடெட்) ஜஃபர்ஜி பிரதர்ஸ், ஜே.எஃப்.எஸ். ஹோல்டிங்ஸ், கம்ரூ அப்பேரல்ஸ், கியோட்டோ கோபி கம்பனி, லக்லோ லங்கா பிரைவேட் லிமிடெட், லாரா, மாயா ஹேன்டிகிராப்ட்ஸ். ஆர்பிட் வேர்ல்ட் இன்டர்நேஷனல், ஆர்.எச்.எஸ். பீ ஹனி, ரான்ஃபர் குரூப், ரோச்சந்த் அக்ரோ பார்மா (பிரைவேட்) லிமிடெட், ரன்கிரிஸ்ப் மார்க்கெட்டிங் (பிரைவேட்) லிமிடெட், சுரவி ஹெல்த் டு வெல்த், சிங்கராஜ ஹெர்ப்ஸ் (பிரைவேட்) லிமிடெட், சுரவி ஹோல்டிங் (பிரைவேட்) லிமிடெட், டீமா பிஸ்கட் உற்பத்தியாளர்கள், ஊவா பீ ஹனி இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட், வைல்ட் ரெபிட்ஸ் புரடக்ட்ஸ் மற்றும் வை.எம்.ஜே.புரடக்ட்ஸ் ஆகியன சந்தையின் போது காட்சிப்படுத்தப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொலவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். தூதரகத் தலைவர் எரஹபொல மற்றும் முதன்மைச் செயலாளர் (வர்த்தகம்) வீரேஷிகா பண்டார ஆகியோருடன் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி சமிந்த கொலொன்ன சமூக அபிவிருத்தி திணைக்களம், உள்துறை அமைச்சு, பேங்கொக்கில் உள்ள தாய்லாந்து சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்  மற்றும் அயுத்தாயாவில் உள்ள தாய்லாந்தின் ஆதரவு கலை மற்றும் கைவினை ஊக்குவிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் எதிர்கால ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடினார்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 அக்டோபர் 10

.......................... 

මාධ්‍ය නිවේදනය

 ශ්‍රී ලංකාව බැංකොක් හි පැවති  67 වන YWCA රාජ්‍යතාන්ත්‍රික පුණ්‍ය සල්පිල

2022 වැඩසටහනට සාර්ථක ලෙස සහභාගී වේ

බැංකොක් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සහ නිත්‍ය දූත මණ්ඩලය, තායිලන්තය තුළ ශ්‍රී ලංකාවේ අපනයන ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණින් කුළුබඩු සහ ඒ ආශ්‍රිත නිෂ්පාදන අළෙවි මණ්ඩලය, ජාතික ශිල්ප සභාව, ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලය, කාර්මික සංවර්ධන මණ්ඩලය, හස්ත කර්මාන්ත මණ්ඩලය සහ ශ්‍රී ලංකා තේ මණ්ඩලය සමඟ එක්ව, 2022 සැප්තැම්බර් 29 සිට ඔක්තෝම්බර් 02 වැනි දින දක්වා බැංකොක් හි සෙන්ට්‍රල් වර්ල්ඩ් හි පැවති 67 වන YWCA රාජ්‍යතාන්ත්‍රික පුණ්‍ය සල්පිල නමැති වැඩසටහනට  සාර්ථකව සහභාගී විය.

බැංකොක්හි තරුණ කාන්තා ක්‍රිස්තියානි සංගමය, බැංකොක් හි ශ්‍රී ලංකා තානාපතිනියගේ ස්වාමි පුරුෂයා වන ස්ටීවන් සේනානායක මහතා ඇතුළුව, බැංකොක් හි දූත මණ්ඩල ප්‍රධානීන්ගේ භාර්යාවන් හා ස්වාමි පුරුෂයන් සමඟ එක්ව සංවිධානය කරන ලද මෙම සල්පිල සඳහා තානාපති කාර්යාල 37 ක් සහභාගී විය. තවද, සොම්සාවලි කුමරියගේ නියෝජිතවරිය වන ටිකොම්පෝර්න් යුගාලා උත්තමාවිය විසින් මෙම සල්පිල විවෘත කරන ලදී.

මෙම සල්පිල වෙළඳ කුටි 177 කින් සමන්විත වූ අතර, සල්පිල පැවති දින හතර තුළ අමුත්තන් 14,000 දෙනෙකුට අධික පිරිසක් ඊට ආකර්ෂණය විය. මෙම අවස්ථාවට සහභාගී වූ තානාපති කාර්යාල හරහා ලැබෙන පරිත්‍යාග අධ්‍යාපනය, වෘත්තීය, යටිතල පහසුකම් සහ පරිසරය මෙන්ම තායිලන්තයේ ආපදාවලින් පීඩාවට පත් වූවන් වැනි බොහෝ අංශවලට අදාළ ළමුන්, කාන්තාවන් සහ වරප්‍රසාද අහිමි පුද්ගලයන්ගේ ජීවන තත්ත්වය ප්‍රවර්ධනය කිරීමට උපකාරී විය.

මෙම වැඩසටහනට පෙර, Channel 3HD, Channel 7HD, Channel 5HD, Thai PBS, යන නාලිකා සහ You tube මාධ්‍ය ඔස්සේ ශ්‍රී ලංකාවේ නිෂ්පාදන තායිලන්තයේ රූපවාහිනී නාලිකා හරහා ප්‍රවර්ධනය කරන ලදී. ශ්‍රී ලංකාවේ අළෙවි කුටිය කුළුබඩු, හස්ත කර්මාන්ත, ලංකා තේ, ආහාර ද්‍රව්‍ය, රූපලාවන්‍ය ද්‍රව්‍ය ඇතුළුව තායිලන්ත සහ ජාත්‍යන්තර අමුත්තන්ගේ ආකර්ෂණය දිනාගත් තවත් බොහෝ නිෂ්පාදනවලින් සමන්විත විය.

කුළුබඩු සහ ඒ ආශ්‍රිත නිෂ්පාදන අලෙවි මණ්ඩලය, ජාතික ශිල්ප සභාව, හස්ත කර්මාන්ත මණ්ඩලය, ඇරෝමැටික් ග්ලෝබල් (පුද්) සමාගම, අමිල ෆුඩ්ස්, සිලෝන් ස්පයිස් කෙයාර් (පුද්) සමාගම, කැන්ඩ්ල් හවුස් සිලෝන්, CN සෙරමික්, DN ඉන්ටීරියර් ඩිසයින්ස් (පුද්) සමාගම, දීබම්, අර්ත් නැචුරල් (පුද්) සමාගම, ග්‍රීන්ස් ෆ්ලවර් ඩිසයින් (පුද්) සමාගම, හිල්මා ලංකා (පුද්) සමාගම, හෙරිටන්සි නිෂ්පාදකයෝ, හෙමිරා සෙරමික්ස්, ඉරේෂා ස්පයිස් ලංකා (පුද්) සමාගම, ජැෆර්ජි සහෝදරයෝ, JFS හෝල්ඩින්ග්ස්, කම්රූ ඇපරල්ස්, කියෝතෝ කෝපි සමාගම, ලක්ලෝ ලංකා (පුද්) සමාගම, ලෝරා, මායා අත්කම්, ඕර්බිට් වර්ල්ඩ් ඉන්ටර්නැෂනල්, RHS බී හනී, රැන්ෆර් සමූහය, රොචන්ඩ් ඇග්‍රො ෆාර්මා (පුද්) සමාගම, රන්ක්‍රිස්ප් මාර්කටින් (පුද්) සමාගම, සුරවි හෙල්ත් ටු වෙල්ත්, සිංහරාජ හර්බ්ස් (පුද්) සමාගම, සුරවි හෝල්ඩින්ග්ස් (පුද්) සමාගම, ටීමා බිස්කට් නිෂ්පාදකයෝ, ඌව බී හනී කර්මාන්ත (පුද්) සමාගම, වයිල්ඩ් රැබිට්ස් නිෂ්පාදන සහ YMJ නිෂ්පාදන යන සමාගම්වල නිෂ්පාදන මෙම සල්පිල හරහා විදහා දැක්විණි. තවද, එම නිෂ්පාදන ප්‍රවර්ධනය කොට අළෙවි කරන ලදී.

ජාතික ශිල්ප සභාවේ සභාපති සම්පත් එරහපොළ මහතා ද මෙම අවස්ථාවට සහභාගී විය. තානාපති සහ නිත්‍ය නියෝජිත චාමින්දා කොලොන්නේ මැතිනිය, සභාපති එරහපොළ මහතා සහ පළමු ලේකම් (වාණිජ්‍ය) විරේෂිකා බණ්ඩාර මහත්මිය සමඟ එක්ව තායිලන්තයේ ප්‍රජා සංවර්ධන දෙපාර්තමේන්තුව, අභ්‍යන්තර කටයුතු අමාත්‍යංශය, බැංකොක් හි පිහිටි තායිලන්ත ජාත්‍යන්තර සහයෝගිතා නියෝජිතායතනය (TICA) සහ තායිලන්තයේ අයුත්තායා හි පිහිටි සහය කලා හා අත්කම් ප්‍රවර්ධන ආයතනය (SACIT)  සමඟ අනාගතයේ දී එක්ව සිදු කළ හැකි කටයුතු පිළිබඳව සාකච්ඡා පැවැත්වූ හ.

 

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සහ නිත්‍ය දූත මණ්ඩලය

බැංකොක්

2022 ඔක්තෝබර් 10 වැනි දින

...................................

ஊடக வெளியீடு

Please follow and like us:

Close