சியாம் பராகான், பேங்கொக்கில் உள்ள அரச பராகான் மண்டபத்தில் நடைபெற்ற '3வது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தில்' புத்தி பெடிக்ஸின் ஆக்கப்பூர்வமான பணிப்பாளர் தர்ஷி கீர்த்திசேனாவின் பங்கேற்பை பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் நிரந்தரப் பணிமனையும் ஒருங்கிணைத்தது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலங்கையின் பங்கேற்புக்கு அனுசரணை வழங்கியது.
ராணி அன்னை, மாட்சிமை மிக்க ராணி சிரிகிட்டின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, தாய்லாந்தின் மிகப்பெரிய பெஷன் களியாட்டமான '3வது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தை', நிரந்தரச் செயலாளர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் தாய் கலாச்சார மற்றும் ஊக்குவிப்பு சங்கம் ஆகியன இணைந்து நடதத்தின.
பெஷன் ஷோவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதிப் பிரதமர் பேராசிரியர் கலாநிதி விசானு க்ருங்காம், பிரதம மந்திரி பிரயுத் சான்-ஓ-சா மற்றும் அவரது அரசாங்கம் தாய்லாந்து பட்டு பெஷன் ஷோவை, ராணி அன்னையான மாட்சிமை தங்கிய ராணி சிரிகிட்டின் முக்கியமான பாரம்பரியமான தாய் பட்டின் மூலம் ஏனைய நாடுகளுடன் பல்தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும், கலாச்சாரப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
'பெஷன் டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் போது, தாய்லாந்து பட்டுகளால் செய்யப்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால ஆடைகளை 60 நாடுகளைச் சேர்ந்த பெஷன் வடிவமைப்பாளர்கள் காட்சிப்படுத்தினர். ஜிம்மி சூ, ரோக்கோ பரோக்கோ மற்றும் டான்ஹா கிம் போன்ற புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் நடுவர் குழுவில் சேர்ந்து பெஷன் மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
'3வது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தின்' ஏற்பாட்டுக் குழுவில் தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் சமிந்த கொலொன்னவின் கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க உட்பட பேங்கொக்கை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இராஜதந்திர உறுப்பினர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், சர்வதேச வடிவமைப்பு நிறுவனங்கள், ஆடம்பர தரநாமங்களின் பிரதிநிதிகள், ஆடை வடிவமைப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் பயண முகவர்கள் உட்பட ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 பார்வையாளர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தந்தனர்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
பேங்கொக்
2022 டிசம்பர் 28