பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு லுவோயாங்க் மாநகர அரசாங்கத்தினால் பியோனி தோட்டம் அன்பளிப்பு

 பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு லுவோயாங்க் மாநகர அரசாங்கத்தினால் பியோனி தோட்டம் அன்பளிப்பு

 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பியோனித் திருவிழாவின் போது தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன லுவோயாங்கிற்கு மேற்கொண்ட விஜயத்தினைத் தொடர்ந்து, லுவோயாங்க் மாநகர மக்கள் அரசாங்கதின் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகம் பீஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஒரு பியோனி தோட்டத்தினை அன்பளிப்பாக வழங்கியது.

நன்கு வளர்ந்த பியோனி மலர்ச்செண்டுத் தொகுதியுடனான வண்டியுடன் வருகை தந்த லுவோயாங்க் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஒரு குழுவினர், தூதரகத்திலுள்ள விசாலமான தோட்டத்தில் அவற்றை நடுவதற்கு உதவி செய்தனர். பூச்செண்டுகளுக்கான மண் கூடலுவோயாயங்கிலுருந்து கிடைக்கப்பெற்றது. சீனாவினுடைய மிக பிரபல்யமான மலராக பியோனி விளங்குகின்றது. மலரும் போது, பியோனி மலர்கள் மனதுக்கினிய அழகான காட்சியை அளிக்கின்றன.

2021 அக்டோபர் 20ஆம் திகதி தூதரகத் தோட்டத்தில் எளிமையான வகையில் நடைபெற்ற நிகழ்வின் போது, புதிதாக நடப்பட்ட பியோனி மலர்த்தோட்டம் அடையாளபூர்வமாக தூதுவர் மற்றும் தூதரக ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

“அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தில் பியோனி மலர்கள் பூப்பது போல், மேலும் பல வசந்தங்கள் வரவிருக்கின்றன. இரு நாடுகளினதும் மக்களிடையே குறிப்பாக லுவோயாங்க் மக்களுக்கிடையேயான அன்பான நட்புறவானது தொடர்ந்தும் மலரும்” என பரிசினை ஏற்றுக்கொண்ட கலாநிதி. கொஹொன குறிப்பிட்டார்.

வணிக மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக அழகிய லுவோயாங்குடன் ஈடுபடுவதனை வரவேற்பதாக லுவோயாங்க் மாநகர மக்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. பாய் சிபின் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்க்

2021 அக்டோபர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close