புலப்படா கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ அரசாங்கங்களுக்கிடையிலான குழுவிற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

புலப்படா கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ அரசாங்கங்களுக்கிடையிலான குழுவிற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

2018 - 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான புலப்படாத கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கென ஒதுக்கப்பட்ட நான்கு (04) ஆசனங்களில் ஒன்றுக்காக 2018 ஜுன் 06 ஆந் திகதியாகிய இன்று இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் வாக்கெடுப்பு பரிஸ் நகரில் யுனெஸ்கோவின் 7 ஆவது பொதுக் கூட்டத்தொடரின் போது இடம்பெற்றது.

இத்தேர்தலில் ஆசிய பசுபிக் பிராந்தியக் குழுவிலிருந்து பங்களாதேஷ், சீனா, ஜப்பான், கஸகஸ்தான், தாய்லாந்து, மலேசியா, பலௌவ் மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகள் போட்டியிட்டிருந்தன. பலௌவ் தனது வேட்பாளர் உரிமையை இன்று மீளப்பெற்றுக்கொண்டதுடன், ஏழு நாடுகள் தேர்தலுக்கு போட்டியிட்டன. தேர்ந்தெடுப்பில் வெற்றி பெற்ற நாடுகளான சீனா, இலங்கை, ஜப்பான் மற்றும் கஸகஸ்தான் ஆகியவை முறையே 123, 122, 107 மற்றும் 98 வாக்குகளைப் பெற்றுக் கொண்டன.

2003 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பொது மாநாட்டின் 32 ஆவது அமர்வில் பின்பற்றப்பட்ட கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான சர்வதேச கொள்கைகள் பரிணாமத்தின் மைல்கல்லாக இந்த புலப்படா கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான சாசனம் உருவாகியது. வாய்மொழி மூலமான மரபுகள், கலை நிகழ்ச்சிகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள், இயற்கை தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அறிவு மற்றும் திறன்கள் ஆகிய எமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபுரிமைகளை இலங்கையில் சமூகங்கள் மத்தியிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேவையை அங்கீகரித்தலுக்காக 2008 இல் இச்சாசனத்தின் அரச தரப்பாக இலங்கை உருவாகியது. இந்த சாசனத்திற்கான அரசத் தரப்பாக உருவானதிலிருந்து இவ் ஆசனத்திற்காக இலங்கை போட்டியிட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

வளர்ந்து வரும் உலகமயமாதலில் கலாச்சார பன்முகத்தன்மையைப் பேணுவதில் புலப்படாக் கலாச்சார மரபுரிமைகள் மிக முக்கிய காரணியாக உள்ளதாகவும் மற்றும் வெவ்வேறு சமூகங்களிலுள்ள புலப்படாக் கலாச்சார மரபுரிமைகளைப் புரிந்துகொள்வதனூடாக உள்ளகக் கலாச்சார கலந்துரையாடல்களை ஊக்குவிக்கவும், வாழ்வின் ஏனைய வழிகளில் பரஸ்பரத்தை மேம்படுத்துவதற்கும் உதவியாக அமையும் என இலங்கை அடையாளப்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரின் பிரத்தியேக வாழ்க்கை முறைகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் மற்றும் பாரம்பரியங்களை மதித்தல் மற்றும் புரிந்துகொள்வதுடன், நாட்டின் அனைத்து சமூகங்களினதும் பழைமையான பாரம்பரியங்களை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான இலங்கையின் பெரும் முயற்சிகள் ஊடாக நாட்டில் நல்லிணக்கச் செயல்பாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு காரணமாக இக் குழுவிற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்த இச் சாசனத்திற்கு விலைமதிப்பில்லா ஆதரவினை நல்கிய அனைத்து அரச தரப்புக்களுக்கும் இலங்கை தனது ஆழமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

2018 ஜூன் 6

 

TAMIL- PDF

Please follow and like us:

Close