பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் புலம்பெயர் தொழிலாளர்கள்  திணைக்களத்தின் செயலாளரை (அமைச்சர்) மரியாதை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் புலம்பெயர் தொழிலாளர்கள்  திணைக்களத்தின் செயலாளரை (அமைச்சர்) மரியாதை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பிலிப்பைன்ஸின் புலம்பெயர் தொழிலாளர்கள் திணைக்களத்தின் செயலாளர் (அமைச்சர்) சூசன் வி. ஓப்லேவை மரியாதை  நிமித்தம் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல், பணியாளர்களை மேம்படுத்துதல் மற்றும் மீள்திறன் செய்தல் உள்ளிட்ட ஒத்துழைப்பிற்கான  சாத்தியமான வழிகளை ஆராய்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் திணைக்களத்தின் கொள்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான உள்ளகச் செயலாளர் பாட்ரிசியா இவோன் கௌனன், பிலிப்பைன்ஸ்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்பின் நிர்வாகி பெர்னார்ட் பி. ஒலாலியா மற்றும் இரண்டாவது செயலாளர் / சான்சரியின் தலைவர் பி.ஜி.பி. கௌசல்ய ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2022 அக்டோபர் 25

Please follow and like us:

Close