பிரதமர் இத்தாலிக்கு விஜயம்

பிரதமர் இத்தாலிக்கு விஜயம்

இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

செப்டம்பர் 06ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் நோக்கத்தை வெளிநாட்டு அமைச்சர் தெளிவாக விவரித்தார். ஐரோப்பாவின் பழமையான கற்றல் தளமான பொலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சர்வதேசக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் இலங்கைப் பிரதமர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

எந்த நிலையிலும், திருத்தந்தை பாப்பாண்டவரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்வதற்கு பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை அல்லது பிரதமருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை.

பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் இத்தாலியை  விட்டு வெளியேறுவார்கள்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 செப்டெம்பர் 08

Please follow and like us:

Close