பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதலாவது சர்வதேச நினைவு நாள் மற்றும் அஞ்சலி தினம்  இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரகததினால் முன்னெடுப்பு

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதலாவது சர்வதேச நினைவு நாள் மற்றும் அஞ்சலி தினம்  இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரகததினால் முன்னெடுப்பு

ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் டொராண்டோவில் உள்ள இலங்கையின் துணைத்  தூதரகம் ஆகியன பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலாவது சர்வதேச நினைவு தினம் மற்றும் அஞ்சலி நிகழ்வை 2021 ஆகஸ்ட் 21ஆந் திகதி மாலை 6.00 மணிக்கு நடாத்தின.

பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் மற்றும் ஆதரவு  வழங்கும் மற்றும் ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் அடிப்படையில்  அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை முழுமையாக அனுபவிப்பதனை உறுதிப்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 21ஆந் திகதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் மற்றும் அஞ்சலி செலுத்தும் தினமாக பொதுச் சபை அதன் தீர்மானம் 72/165 (2017) இன் மூலம் நிறுவியது.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைவரினதும் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி நிகழ்வுகள் தொடங்கியது. கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்தாரா கான் வரவேற்புரையாற்றினார். டொராண்டோவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் கபில ஜயவீரவும் உரையாற்றினார். டொன் வெலி ஈஸ்ட் கனடாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினரும், கனடா இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவருமான யாஸ்மின் ரத்தன்சி உரையாற்றுகையில், 'விடுதலைப் புலிகளுக்காக போராடுவதற்காக அவர்களால் இளம் சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட சில  இடங்களைப் பார்வையிடுவதும், தமிழர்கள் புலிகளால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட திகில் கதைகளைக் கேட்பதும் எனக்கு மிக முக்கியமாகும்' எனத் தெரிவித்தார்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியர் மற்றும் மத்திய பொதுச் சேவையின் கனேடிய சிவில் சேவையின் முன்னாள் அரச ஊழியர் மற்றும் தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தில் சமூகப் பணி பேராசிரியரான கலாநிதி. சரத் சந்திரசேகர சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சந்திரசேகர தனது உரையில், ஐ.நா. வரையறைகளின்படி 'பயங்கரவாதம்' மற்றும் இனப்படுகொலையை வரையறுத்ததுடன், பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளையும், அது உலக மக்களின் சமூக வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதையும் விளக்கினார். இலங்கையின் அனுபவத்தையும் குறிப்பிட்ட அவர், 'விடுதலைப் புலிகள் மக்களை பங்களிக்க கட்டாயப்படுத்தியதாகவும், கனடா ஒரு மாதத்திற்கு கனேடிய டொலர்கள் 280,000 அளவில் ஆயுதங்களை கொள்வனவு செயவதற்கான முன்னணிப் பங்களிப்பாளராக இருந்ததாகவும் தெரிவித்தார். கனடாவில் உள்ள தமிழ் வணிகங்கள் தமது வருமானம் அல்லது லாபத்தில் 10% முதல் 20% வரை விடுதலைப்  போருக்காக வழங்கியதாக பேராசிரியர் சந்திரசேகர குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் பொதுப் பாடசாலைகளை ஆக்கிரமித்து மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களை தற்கொலைக் குண்டுவீச்சாளர்களாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் லஷின்கா தம்முல்லகேவும் கலந்து கொண்டார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

ஒட்டாவா

2021 ஆகஸ்ட் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close