பணித்தொடக்கம் - 2026   வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு  

பணித்தொடக்கம் – 2026   வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு  

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 2026 ஆம் ஆண்டிற்கான தனது உத்தியோகபூர்வ கடமைகளை இன்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற கண்ணியமானதும், ஈடுபாட்டுடன் கூடியதுமான நிகழ்வுடன் முறையாகத் தொடங்கியது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்வு இனிதே தொடங்கியது. போர் வீரர்களுக்கும், தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களும், பொது சேவைக்கான தங்கள் உறுதிமொழியை சிங்களம் மற்றும் தமிழில் வாசித்து, நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தேசத்திற்கான தங்களது சேவையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைச் செயலாளர் திருமதி அருணி ரணராஜ உரையாற்றினார்; அவர் அமைச்சின் செயல்பாடுகளில் தொழில்வாண்மை, சகல விடயங்களையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் நிறுவன சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சேவை வழங்கலை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட கடந்த ஆண்டிற்கான  அமைச்சின் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்தும் அவரது உரை பிரதிபலித்தது.

இதனைத்தொடர்ந்து, சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ருவன் ரணசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் முக்கிய உரைகள் இடம்பெற்றன. அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மூலோபாயத் தொலைநோக்கை கோடிட்டுக் காட்டினர். அவர்களின் முக்கிய கருத்துக்களில், வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் தித்வா சூறாவளியின் தாக்கங்களைத் தொடர்ந்து தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.

தேசிய நலன்களை முன்னேற்றுவதற்கும், எதிர்வரும் ஆண்டில் பயனுறுதிமிக்கதொரு பொது சேவையை வழங்குவதற்கும் அமைச்சின் ஈடுபாட்டை இவ்விழா மீண்டும் உறுதிப்படுத்தியது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2026 ஜனவரி 01

                                                      

 

 

 

 

 

 

 

 

 

                 

Please follow and like us:

Close