பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 நவம்பர் 25ஆந் திகதி பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் சுட்டிக்காட்டி, வான் மற்றும் கடல் இணைப்பைப் பயன்படுத்தி மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முன்னோக்கிய வழிமுறைகள் குறித்து அமைச்சர் சப்ரி மற்றும் பிரதமர் ஹசீனா ஆகியோர் கலந்துரையாடினர். கொழும்புத் துறைமுகத்தின் ஊடாக பங்களாதேஷ் கப்பல்களுக்கு அதிக இழுவையை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்த பிரதமர், இலங்கையிடமிருந்து மேலதிக முதலீடுகளை அழைத்தார். சுற்றுலா மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் சப்ரி, இலங்கை குறித்து ஆராயுமாறு பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அமைச்சர் அலி சப்ரி, இந்து சமுத்திர விளிம்பு சங்கததின் துணைத் தலைவராக அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டாக்காவிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

 

2022 நவம்பர் 26

Please follow and like us:

Close