நடமாடும் கொன்சியூலர் சேவை மற்றும் சமூக நிகழ்வை ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜப்பானின் கியோட்டோவில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நடமாடும் கொன்சியூலர் சேவை மற்றும் சமூக நிகழ்வை ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜப்பானின் கியோட்டோவில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் நோக்குடன், ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் கியோட்டோவில் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை டோக்கியோவிலிருந்து அண்ணளவாக 600 கி.மீ. தொலைவில் 2021 ஆகஸ்ட் 28ஆந் திகதி நிறைவு செய்தது.

சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டுக்களைப் புதுப்பித்தல், பிறப்புப் பதிவு, உறுதிமொழிப் பத்திரம், சத்தியப் பிரமானம், அதிகாரப் பத்திரம் சான்றளித்தல் போன்றவற்றுடன் 200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த நடமாடும் சேவை உதவியது.

கன்சாய் பகுதியில் இரண்டு நாட்களைக் கழித்த தூதுவர் சஞ்ஜீவ் குணசேகர, இலங்கையுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட ஐந்து விகாரைகளின் (3 பாரம்பரிய இடங்கள் உட்பட) தலைமை மதகுருக்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை சந்தித்தார். தூதுவர் கியோட்டோ பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், வருங்கால ஜப்பானிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நட்புறவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடினார்.

கன்சாய் ஜப்பான் இலங்கை தேசிய அமைப்பு இந்த நடமாடும் சேவையை நடாத்தியது. பெரும்பாலும் வாகன சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களாக இருந்த 200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுடன் உரையாடின தூதுவர் குணசேகர, இலங்கைத் தயாரிப்புக்கள் மற்றும் தானியங்கி தொடர்பான ரப்பர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற சேவைகளை ஏற்றுமதி செய்வது குறித்து சிந்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கு உதவும் ஜப்பானின் திறமையான தொழிலாளர் திட்டத்தில் வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் வெபினார் பற்றி தூதுவர் குணசேகர குறிப்பிட்டார். புதிதாக புனரமைக்கப்பட்ட தூதரக வலைத்தளத்தைப் பார்வையிடுமாறும், தூதரகம் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும்  அறிந்து கொள்வதற்காக அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தைப் பின்பற்றுமாறும் இலங்கை சமூகத்தினரிடம் தூதுவர் குணசேகர கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தூதரகம்

டோக்கியோ

2021 ஆகஸ்ட் 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close