இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சை உள்ளடக்கிய பாலின முக்கியத்துவத்திற்கான தொழில்நுட்ப மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டத்தை வெளிநாட்டலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பேரவை 2021 செப்டம்பர் 16ஆந் திகதி தொடங்கியது.
இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் இலங்கையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, வெளிநாட்டலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பேரவை நடாத்தும் இந்த பயிற்சித் திட்டமானது மூன்று திட்டங்களில் ஒன்றாகும். இந்தப் பயிற்சித் திட்டமானது, பாலின பிரதான ஓட்டம், பாலினப் பகுப்பாய்வு மற்றும் பாலினப் பொறுப்பு வரவு செலவுத் திட்டம் ஆகிய அடிப்படை ஜீ.ஏ.டி. கருத்துகள் பற்றிய கற்றல் அமர்வை உள்ளடக்கியது.
தனது வரவேற்புரையில், வெளிநாட்டலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பேரவையின் மாற்றுத் தலைவர் திருமதி. லில்லிபெத் டீபெரா, பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் பாலின முக்கியத்துவத்தின் அவசியம் குறித்து பேசினார். ஒட்டுமொத்த பாலின ஓட்டத்தை முன்னேற்றுவதற்காக நாடுகளின் முன்னுரிமை அடிப்படையில் இலக்கு 5 நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவது குறித்து அவர் விரிவாக விவரித்ததுடன், இந்தத் திட்டத்திற்கான தூதரகத்தின் ஒத்துழைப்பு முயற்சிகள் மற்றும் வரிசை அமைச்சுக்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.
தனது தொடக்க உரையில், நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் சிறப்புமிக்க விஸ்டாக்கள்', இலங்கையின் அபிவிருத்திக்கான தேசிய கொள்கை அமைப்பான அரசின் நீல அச்சு 'நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை' ஆகியவற்றை செயற்படுத்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை அடைவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பை தூதுவர் ஷோபினி குணசேகர விவரித்தார்.1931 ஆம் ஆண்டில் உலகளாவிய வயதுவந்தோர் வாக்குரிமையை வழங்கிய முதல் நாடு இலங்கை என மேற்கோள் காட்டி, இலங்கை ஏற்கனவே மேற்கொண்ட முன்னேற்றத்தையும் அவர் குறிப்பிட்டதுடன், கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்கவை 1960 இல் இலங்கையின் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் உலகின் முதலாவது பெண் பிரதமரை வழிநடத்தியமையில் இலங்கை முன்னணியில் இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் அதிகரித்த பிரதிநிதித்துவங்களின் மூலம் பெண்களுக்கான சிறந்த உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நாம் மனநிறைவுடன் இருக்க முடியாது, ஆனால் மேலும் சாதிக்க முயற்சிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் ஒரு ஆழமான புரிதல் உணர்வை அளிக்கும் ஒரு விரிவான பயிற்சித் திட்டத்தைத் தொடங்கிய வெளிநாட்டலுவல்கள் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பேரவைக்கு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. குமாரி ஜயசேகர நன்றிகளைத் தெரிவித்தார்.
மூன்று அமர்வுகளாக நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், இலங்கையிலின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் ஏனைய வரிசை அமைச்சுக்களிலிருந்து 30 பங்கேற்பாளர்கள் பங்கேற்பதுடன், இது 2021 அக்டோபர் 11ஆந் திகதி நிறைவடையும்.
இலங்கைத் தூதரகம்,
மனிலா
2021 அக்டோபர் 01