தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டம் ஒரு ஆதாரமாக உள்ளது - வெளிநாட்டு அமைச்சர்

 தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டம் ஒரு ஆதாரமாக உள்ளது – வெளிநாட்டு அமைச்சர்

ஆகஸ்ட் 11ஆந் திகதி கொழும்புத் திட்டத்தின் 47வது ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, உறுப்பு நாடுகளுடன் இணையும் போது, கொழும்புத் திட்டத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்திப் பகுதிகளில் வேலை மற்றும் அனுபவம் தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகின் சவால்கள் வலிமையின் ஆதாரமாக இருக்கும் எனத் தெரிவித்தார். உலகளாவிய காலநிலை சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாதலால், கொழும்புத் திட்ட உறுப்பு நாடுகள் தற்போதுள்ள ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் மற்றும் புதிய மற்றும் சவாலான உலகளாவிய சூழலில் ஒத்துழைப்புக்கான  புதிய வழிகளை ஆராய வேண்டும்.

அனைத்து உறுப்பு நாடுகளினதும் அர்ப்பணிப்பு, பங்களிப்பு மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கை ஆகியவற்றைப் பொறுத்து அமைப்புக்களின் வெற்றி ஏற்படுகின்றது என்பதை நினைவுபடுத்திய அமைச்சர், அனைவருக்கும் வளம்  பெறும் வேட்கையில் அபிவிருத்தியடைந்துவரும் உறுப்பு நாடுகளுக்கான அர்த்தமுள்ள திட்டங்களை தக்கவைத்து மேலும் மேம்படுத்த உதவும் வகையில் அபிவிருத்தியடைந்த அரசுகள் கொழும்புத் திட்டத்திற்கு தமது ஆதரவை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கையான 'நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை' க்குள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'பசுமை மற்றும் ஸ்மார்ட்' நகரங்களின் இலக்குக்கு ஏற்ப, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிலையான பசுமை நகரங்களை உருவாக்குவதற்கான கொழும்புத் திட்டத்திற்குள் திட்டங்களை ஊக்குவிப்பதறகான இலங்கையின் விருப்பத்தை அறிவித்தார். விரைவான நகரமயமாக்கல் மற்றும் நிலையான நகரங்களின் தேவை மற்றும் அதிகரித்து வரும் பசுமையான இடங்கள் பற்றிய உலகளாவிய தலைப்பில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் தொழில்நுட்பத் தாக்கத்தை தொடர்ந்தும் எதிர்கொள்வதற்கு விரைவான நகரமயமாக்கல் வழிவகுபபதாகத் தெரிவித்தார். நிலையான நகரங்களை உருவாக்குவதற்கு முதலீடுகள் தேவைப்படுவதால், திறன் அபிவிருத்தி, பசுமைத் தொழில்நுட்பம், ஆற்றல்  மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் நிலையான மற்றும் நம்பகமான பொதுச் சேவைகளின் அபிவிருத்தி போன்ற உதவிகள் மூலம் நாடுகள் ஆதரிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டிய நாடுகளின் நிதிக் கடனை ஈடுசெய்வதற்காக  சாதகமான வருமானத்தை வழங்குவதற்காக, பசுமை சுற்றுச்சூழல் கலந்துரையாடல்களில் முன்மொழியப்பட்ட முன்னுதாரண மாற்றத்தில், இலங்கையைச் சேர்ந்த உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலரான பேராசிரியர் ரணில் சேனாநாயக்கவையும் வெளிநாட்டு அமைச்சர் மேற்கோள் காட்டினார்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தனது வரவேற்புரையில், மனித வள அபிவிருத்தி மற்றும் தெற்கு - தெற்கு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்புக்கான முந்தைய முயற்சிகளில் ஒன்றாக கொழும்புத் திட்டம் வரலாறு படைத்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். உலக  மக்கள்தொகையில் சுமார் 40% மக்கள்தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 37 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட பொருளாதாரக் குழுவாக கொழும்புத் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் இன்று கவனித்தார்.

கொழும்புத் திட்டத்தின் செயலாளர் நாயகம், தூதுவர் மாண்புமிகு பன் கியே து அமர்வில் உரையாற்றியதுடன்,  கொழும்புத் திட்டத்தின் கலந்துரையாடல்களுக்கான இலங்கை மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளின் பங்களிப்பைப் பாராட்டினார்.

கொழும்புத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஐந்தாவது முறையாகவும் இருபது ஆண்டுகளில் முதல்  முறையாகவும் இரண்டு நாள் அமர்வாக 47வது ஆலோசனைக் குழுக் கூட்டத்தை இலங்கை நடாத்துகின்றது.

வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. பி.எம். அம்சா தலைமையில்  இந்த ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், பொருளாதார விவகாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் திரு. எச்.எம்.கே. ஹேரத், பொருளாதார விவகாரப் பிரிவின் பணிப்பாளர் திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க மற்றும் பொருளாதார விவகாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் திரு. அகமது ராஸி ஆகியோர் இலங்கைத் தூதுக்குவில் இடம்பெற்றிருந்தனர்.

கொழும்பில் 1950ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் வெளிநாட்டு விவகாரங்களுக்காக கொழும்பில்  நடைபெற்ற கூட்டுறவு முயற்சியாக கருவூட்டப்பட்ட கொழும்புத் திட்டத்தின் ஸ்தாபக உறுப்பினர் இலங்கையாகும். இது 1951  இல் நிறுவப்பட்டதுடன், ஆரம்பமாக ஏழு உறுப்பு நாடுகளிலிருந்து 2021 இல் இருபத்தேழு நாடுககளாக உயர்வடைந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக, இந்த அமைப்பின் தலைமையகம் கொழும்பில் உள்ளது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 ஆகஸ்ட் 11

Please follow and like us:

Close