தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சருடன் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சருடன் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, 2022 ஜனவரி 11ஆந் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு அஹ்மட் அவர்களை வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சிய நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புக்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை மேம்படுத்துதல், கல்வியிலான பங்காளித்துவம், ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் மற்றும் ருவாண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மற்றும் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் போன்ற இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய இருதரப்பு உறவுகளிலான பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2022 ஜனவரி 18

Please follow and like us:

Close