குவாங்சோவில் 2021 செப்டம்பர் 16 -19 வரை நடைபெற்ற 17வது சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனாவில் அமைந்துள்ள 07 இலங்கை நிறுவனங்களைக் கொண்ட இலங்கை நாட்டுக் கூடத்தை குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது.
2004 முதல் தொடங்கப்பட்ட சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் காட்சிப்படுத்தி, வர்த்தகத்தில் ஈடுபட்டு, பரிமாறி, ஒத்துழைப்பதற்காக நல்லதொரு புரிதலை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மற்றும் சீனா மற்றும் ஏனைய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தின் பொதுவான அபிவிருத்திக்காகவும் ஒரு தளத்தை வழங்குகின்றது.
இலங்கையின் கூடமானது, லயன் மெனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட், சிலோன் டிப்ஸ் பிரேண்டிங் (பிரைவேட்) லிமிடெட், மலிபன் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் (பிரைவேட்) லிமிடெட், ஆர்பிகோ, இம்பீரியல் டீ பிரைவேட் லிமிடெட், சினோலான் டீ மற்றும் டீ டோக் ஆகியவற்றைக் கொண்டிருந்ததுடன், அவை இலங்கைத் தேயிலை, பிஸ்கட், சுவையூட்டிகள், கித்துல் பானி, தேங்காய் எண்ணெய், செவ்விளநீர் மற்றும் ஆர்பிகோ தலையணைகள் ஆகியவற்றை கண்காட்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கொள்வனவாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஊக்குவித்து விற்பனை செய்தது.
இலங்கை நிறுவனங்களுக்கு தென் சீனாவில் இலங்கைத் தயாரிப்புக்களை ஊக்குவிப்பதற்கான நல்லதொரு வாய்ப்பை சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சி அளித்தது. நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களுக்காக குறிப்பாக கித்துல் பாணிக்கு பல எதிர்கால சீனக் கொள்வனவாளர்களைப் பாதுகாக்க முடிந்ததுடன், சீனக் கொள்வனவாளர்களுடன் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற இது, பெரிய சீன சந்தைக்கு தயாரிப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியது.
இலங்கைக் கூடத்தில் குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணை தூதரகத்தின் கூடம் அமைக்கப்பட்டிருந்ததுடன், அதில் இலங்கை சுற்றுலாத் தலங்கள், கலாச்சாரத் தலங்கள் மற்றும் இலங்கையின் சில கைவினைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சியின் பார்வையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் பலர் இலங்கைக் கூடத்திற்கு ஈர்க்கப்பட்டு, இலங்கை குறித்து விசாரித்து, 'சிலோன் டீ' யை சுவைத்து, பொருட்களை பரிசோதித்து கொள்வனவு செய்தனர்.
இந்த ஆண்டு சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சியில் 35 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் உட்பட 2000 உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காணப்பட்டன.
கண்காட்சியில் முக்கியமாக தென் சீனாவைச் சேர்ந்த 100,000 பார்வையாளர்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் இருந்தனர்.
இலங்கை துணைத் தூதரகம்
குவாங்சோ
2021 செப்டம்பர் 23