தென்னாபிரிக்காவில் இலங்கையின் படகுத் தொழிலை ஊக்குவித்தல்

தென்னாபிரிக்காவில் இலங்கையின் படகுத் தொழிலை ஊக்குவித்தல்

மொசாம்பிக் மற்றும் நமீபியாவின் மீன்வளத் துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தும் வகையில், அரச கிடங்கு  வசதிகள், கொள்கலன் முற்றங்கள், துறைமுக விநியோக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து, இலங்கைக்கு சாத்தியமான வணிக வாய்ப்புக்களை அடையாளம் காண்பதற்காக 2021 செப்டம்பர் 13ஆந் திகதி தகவல் வழங்கும் வெபினாரொன்றை பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது. இந்தப் பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் மீன் உற்பத்தி சந்தைகள் சர்வதேச வணிக சமூகத்திற்கு இலாபகரமான வாய்ப்புக்களை வழங்குகின்றன. மொசாம்பிக் மற்றும் நமீபியாவின் கணிசமான அளவிலான மீன்வளப் பொருட்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தென்னாபிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரசேகர இந்த இரண்டு சந்தைகளிலும் கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் சமூக அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் மீன்பிடித் தொழிலுக்கான சர்வதேச முதலீடுகள் மற்றும் மானியங்களின் நகர்வை எடுத்துரைத்தார். ஸ்பெயின், சீனா மற்றும் ஜப்பான் ஆகியன ஏற்கனவே இந்தப் பிராந்தியத்தில் தமது மீன்பிடி வணிகத்தை நிறுவியுள்ளமையஜனால், இந்தப் போட்டி இவர்களுக்கிடையில் வருகின்றது. இந்து  மற்றும் அட்லாண்டிக் சமுத்திரங்களின் நிறைவுறா அறுவடைத் திறனானது, புதிய முதலீடுகள் ஃ வணிகங்கள் இந்த சந்தைகளில் நுழைவதற்கு ஊக்குவிக்கின்றது. மேற்கண்ட இரு நாடுகளினதும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் பொருத்தமான அளவு மற்றும் வடிவமைப்புகளைக் கொண்ட கப்பல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கப்படலாம். அதற்கு இலங்கைப் படகு உற்பத்தி நிறுவனங்கள் திறன் கொண்டவையாகவுள்ளன.

பாரம்பரிய ஏற்றுமதி வணிகத்தைத் தாண்டி மேம்பட்ட வணிக மாதிரிகளின் மூலம் இந்த சந்தையில் ஊடுருவ வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய இராஜாங்க செயலாளர் தம்மிகா மாத்தரஆராச்சி, ஐரோப்பிய மற்றும் ஜப்பானியத் தொழில்களைப் போன்ற படகுத் தொழில்நுட்பத்தின் உயர் திறனை ஊக்குவித்தார். படகுகளுக்கான தேவையானது, வறுமையை ஒழித்தல் மற்றும் இப்பகுதி சமூகத்தின் ஆரோக்கியமான இடைவெளியைப் பூர்த்தி செய்தல்  ஆகியவற்றின் அடிப்படையில் அமைதல் வேண்டும் என பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.இலங்கைப் படகு உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்காக மேற்கண்ட இரு நாடுகளினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு உயர்ஸ்தானிகர் அமரசேகர ஒப்புக்கொண்டார். இலங்கைத் தரப்பில் இருந்து எளிமையான பாத்திரத்தை வகிக்க இராஜாங்க செயலாளர் மாத்தரஆராச்சி ஒப்புக்கொண்டார்.

இந்தத் தொழிழ் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நீல் மரைன் நிறுவனத்தின் கபில சுமணபால, ஹைரு கடற்படைக் கைவினைப் பொறியியலின் இசட்.எம். ஹைரு, தனுஷா மரைனின் சுமித்ரா பெர்னாண்டோ மற்றும் சச்சித்ரா  பெர்னாண்டோ, கொழும்பு டொக்யார்ட் பி.எல்.சி. யின் டி.வி. அபேசிங்க, பி.ஏ.எஃப்.எஃப். பொலிமெக்கின் இந்திர ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்று ஆபிரிக்கப் பிராந்தியத்துடன் தொடர்புடைய தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

உயர்ஸ்தானிகராலயத்தின் வணிகப் பிரிவு இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தி வழிநடாத்தியது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

பிரிட்டோரியா

2021 செப்டம்பர் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close