தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ டி சூசாவிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ டி சூசாவிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

2022.01.17ஆந் திகதி அன்று போர்த்துக்கல் லிஸ்பனில் உள்ள அஜுடா தேசிய அரண்மனையில் நடைபெற்ற விழாவில், தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம தனது நற்சான்றிதழ்களை போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ டி சூசாவிடம் கையளித்தார்.

தனது நற்சான்றிதழ்களைக் கையளித்த தூதுவர் பேராசிரியர் ஹிரிம்புரேகம, போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதிக்கான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், போர்த்துக்கல் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை, குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும், 1505 முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவில் கவனத்தை ஈர்த்த தூதுவர், போர்த்துக்கேயர்கள் கோட்டை இராச்சியத்துடன் வர்த்தக உறவுகளை நிறுவியமையை நினைவு கூர்ந்தார். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கேயர்கள் குறிப்பாக இலாபகரமான சுவையூட்டி வர்த்தகம் போன்ற தமது வர்த்தக நலன்களை பாதுகாக்கும் நோக்கத்தை நோக்கி அனுப்பப்பட்டதாகவும், 1500 களின் போது, மொழி, இசை மற்றும் உணவு ஆகியவற்றைப் பொறுத்து அப்போது சிலோன் என அறியப்பட்ட இலங்கையில் போர்த்துக்கேயச் செல்வாக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது பிரதிபலிப்பில்,இரு நாடுகளுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க வரலாற்று உறவுகளின் காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு மற்றும் பன்முக அரங்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தூதுவர் பேராசிரியர் ஹிரிம்புரேகமவுடன் பரிசில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான திருமதி. துலன்ஜி ஹேரத் இணைந்திருந்தார்.

அண்டோரா, போர்த்துக்கல், ஸ்பெயின், மொராக்கோவிற்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டு, மற்றும் யுனெஸ்கோவிற்கு இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக தூதுவர் பேராசிரியர் ஹிரிம்புரேகம இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தூதரகம்,

பிரான்ஸ்

2022 ஜனவரி 27

Please follow and like us:

Close