ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரமளித்துள்ள தனது நற்சான்றிதழ்களை 2021 டிசம்பர் 07ஆந் திகதி பெலாரஸின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் நிகோலாய் போரிசெவிச்சிடம் கையளித்தார்.
சுமுகமான உரையாடலின் போது, வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் ஏனைய துறைகளில் இலங்கைக்கும் பெலாரஸுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர். பெலாரஸில் உள்ள இலங்கை சமூகம் மின்ஸ்க், க்ரோட்னோ, விட்டெப்ஸ்க் மற்றும் கோமல் ஆகிய இடங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவியதன் 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றன.
இலங்கைத் தூதரகம்,
மொஸ்கோ
2021 டிசம்பர் 21
Please follow and like us: