தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நான்ஜிங்கில் உள்ள யுனிசா அரண்மனை (ஃபுடிங்) விகாரைக்கு விஜயம்

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நான்ஜிங்கில் உள்ள யுனிசா அரண்மனை (ஃபுடிங்) விகாரைக்கு விஜயம்

5 பில்லியன் யுவான் செலவில் புத்தரின் மண்டை ஓட்டு எலும்பை வைப்பதற்காக 2012 - 2015 வரை நிர்மாணிக்கப்பட்ட கண்கவர் யுனிசா அரண்மனை (ஃபுடிங்) விகாரையைப் பார்வையிடுவதற்காக தூதுவர் கலாநிதி பாலித கொஹொன விஜயம் செய்திருந்தார். தொல்பொருள் பதிவுகளுக்கு அமைய, இந்த நினைவுச்சின்னம் கி.பி 980 இல் இலங்கையிலிருந்து சீனாவிற்கு கொண்டு வரப்பட்டது (சோழர்கள் இலங்கையின் மீது படையெடுத்த போது). உட்புற அறைக்குள் நுழைவது கண்டிப்பாக மட்டுப்படுத்தப்படுகின்றது (குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே உள்நுழைய முடியும், தொலைபேசிகளைக் கொண்டு செல்ல முடியாது, புகைப்படங்கள் எடுக்க முடியாது மற்றும் புனித நினைவுச்சின்னம் குண்டு துளைக்காத கண்ணாடி அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது). விகாரையின் பிரமாண்டமான குவிமாடம் ஷக்யமுனியின் தலையின் சித்திரப் பிரதிபலிப்பை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், போதி மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து அமையும் வகையில் ஒரு பெரிய கொன்கிரீட் விதானம் அமைக்கப்பட்டுள்ளது.

கி.பி 997 இல் அருகிலுள்ள டா பாவோன் விகாரையின் அப்போதைய தலைமைத் துறவியான அபோட் டெமிங்கினால் விகாரையிலுள்ள கல் நினைவுச்சின்னத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச்சின்னம் 2008 இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

நியு ஷூ மலையின் மேலுள்ள கைவிடப்பட்ட ஒரு பெரிய இரும்புத் தாது சுரங்கத்தை யுனிசா அரண்மனை விகாரை கொண்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 நவம்பர் 19

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close