சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம் மாண்புமிகு கலாநிதி. நயீப் பலாஹ் எம். அல் ஹஜ்ரப் அவர்களை 2022 பிப்ரவரி 08ஆந் திகதி ரியாத்தில் உள்ள பேரவையின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
சுமூகமான இந்த சந்திப்பின் போது, வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம், வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவது முதலான பரஸ்பர நலன்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இலங்கை மற்றும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கைக்கும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவைக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதுவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆராய்ந்தனர் .
இலங்கைத் தூதரகம்,
ரியாத்
2022 பிப்ரவரி 11