துருக்கியின் அன்டலியாவில் இலங்கை பட்டிக் ஊக்குவிப்பு

துருக்கியின் அன்டலியாவில் இலங்கை பட்டிக் ஊக்குவிப்பு

அன்டலியாவிற்கான இலங்கையின் கௌரவத் தூதுவர் அலி கம்புரோக்லுவின் உதவியுடன் இலங்கை பட்டிக் ஊக்குவிப்பு நிகழ்வின் இரண்டாம் கட்டத்தை துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜூலை 20ஆந் திகதி ஏற்பாடு செய்தது.

துருக்கியின் சுற்றுலா மையமான அன்டலியா நகரில் உள்ள கொன்யால்டி கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் இலங்கையின் பட்டிக் மற்றும் கைத்தறிப் புடவைகள், போர்வைகள், சால்வைகள் மற்றும் ஏனைய ஆடைகளின் கவர்ச்சியை பாராட்டியதுடன், இலங்கை விநியோகஸ்த்தர்களுடன் இணைந்து கொள்வதற்காக வர்த்தகத் தளங்களினூடாக தொடர்பு கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

நிகழ்வின் போது, இலங்கையின் பெஷன் துறை மற்றும் பட்டிக் மற்றும் கைத்தறியின் தனித்துவம் குறித்து தூதுவர் ரிஸ்வி ஹசன் அதிதிகளுக்கு விளக்கினார்.இலங்கையின் பட்டிக் மற்றும் கைத்தறித் தொழில்துறையை மட்டுமல்லாது குறும்படத் துறையையும் ஆராயுமாறு கௌரவத் தூதுவர் கம்புரோக்லு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கையின் ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டதுடன், விருந்தினர்களுக்கு இலங்கையின் உணவு வகைகளும் வழங்கப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 ஜூலை 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close