'தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் அரசியலமைப்பால் வகுக்கப்பட வேண்டும்' என கர்த்தினால் தெரிவிப்பு

‘தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் அரசியலமைப்பால் வகுக்கப்பட வேண்டும்’ என கர்த்தினால் தெரிவிப்பு

 சுற்றுச்சூழல் அமைப்பு முறைமை பாதுகாக்கப்பட்டால், நாட்டின் நீர்வளமானது எதிர்காலத்தில் நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக மாறும் என பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். எதிர்வரும் கிறிஸ்மஸ் பருவத்திற்காக கர்த்தினால் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பொருட்டு, அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்றைய தினம் (22) வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மரியாதை நிமித்தம் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

'தற்போது எமது நாட்டில் பாரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனை நிறுத்த வேண்டும். காடுகளை பாதுகாக்கும் திட்டமொன்றை அரசியலமைப்பின் பிரகாரம் வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டில் தாவரங்களை அழிப்பவர்களை கடுமையாக தண்டிப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க முடியுமானால், எதிர்கால உலகின் நீர் பற்றாக்குறையின் போது எமது நீர்வளத்திற்கு பெருமளவிலான தேவை நிலவும்' என கர்த்தினால் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் கூறுகையில், நகரங்களை ஒட்சிசன் பற்றாக்குறையிலிருந்து மீட்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் அபிவிருத்தித் திட்டத்தில் சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தனவும் கலந்து கொண்டார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close