தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவர் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவர் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

2022 இல் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர், தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன மற்றும் அவரது கணவர்ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோர் 2022 ஜனவரி 02ஆந் திகதி உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பிராந்தியம் 14 இன் திருச்சபைப் பிராந்திய ஆளுநரும் மற்றும் வாட் ராய் கிங் விகாரையின் மடாதிபதியுமான வணக்கத்திற்குரிய ஃபிரா தெப்சாசனபிபன், பிராந்தியம் 15 இன் திருச்சபைப் பிராந்திய துணை ஆளுநரும், மஹாசூலலோங்கோர்ன்ராஜவித்யாலயா பல்கலைக்கழகத்தின் நிர்வாக விவகாரங்களுக்கான துணை ரெக்டரும், வாட் பிரயுரவோங்சாவாஸ் வாரவிஹார்ன் கல்வி விவகாரங்களின் தலைவரும், மஹாசூலாலோங்கோர்ன்ரச்சுதித் விகாரையின் பதில் மடாதிபதியும், பௌத்த சீர்திருத்த வியூகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பேராசிரியர் கலாநிதி. பிரதெப்பவோரமேதி, மஹாசூலாலோங்கோர்ன்ராஜவித்யாலயா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பௌத்த கற்கைகள் கல்லூரியின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய பேராசிரியர். கலாநிதி. பிரமஹா ஹன்ஸா தம்மஹாசோ, வாட் ராய் கிங் விகாரையின் உதவி மடாதிபதியான வணக்கத்திற்குரிய ஃபிராக்ரு பிரராட் போங்பன் காந்திசோபனோ, பீ.ஏ. சர்வதேச திட்டத்தின் பணிப்பாளரும், மஹாசூலாலோங்கோர்ன்ராஜவித்யாலயா பல்கலைக்கழகத்தின் பௌத்த பீட உதவியாளருமான பேராசிரியர். கலாநிதி. வால்மொருவே பியரதன மற்றும் தாய்லாந்தில் உள்ள மஹாசூலாலோங்கோர்ன்ராஜாவித்யாலயா பல்கலைக்கழகத்தின் வணக்கத்திற்குரிய கலாநிதி வில்கமுவ ஆரியரதன மற்றும் வணக்கத்திற்குரிய கலாநிதி. பெலியத்தே மெட்டேய்யா ஆகியோருக்கு ஆசிகளை வேண்டி அன்னதானங்களை வழங்கி வைத்தனர். அன்னதான நிகழ்வில் இலங்கைக்கான தாய்லாந்தின் முன்னாள் தூதுவர் போல்டேஜ் வொராசார்ட் மற்றும் வொராசார்ட் அம்மையார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2022 ஜனவரி 03ஆந் திகதியாகிய அடுத்த தினம், தூதுவர் தூதரக ஊழியர்களுடன் இணைந்து சான்சரியில் சம்பிரதாயபூர்வமாக பணிகளத் தொடங்கினார். இந்நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தல், தேசியக் கீதம் இசைத்தல், போர்வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், அரச ஊழியர்களுக்கான உறுதிமொழியை வாசித்தல் மற்றும் தூதுவர் கருத்துரையை வழங்குதல் ஆகியன இடம்பெற்றன.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 ஜனவரி 10

Please follow and like us:

Close