தமிழ்நாட்டில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

 தமிழ்நாட்டில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கலாநிதி. எம்.ஏ. மதிவேந்தனை 2022 ஆகஸ்ட் 19ஆந் திகதி சந்தித்த சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி.வெங்கடேஷ்வரன், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து  கலந்துரையாடினார்.

தென்னிந்தியாவில் இருந்து, ராமாயண யாத்ரா, முருகன் பாதை, மைஸ் சுற்றுலா, கலாச்சார நிகழ்வுகள், சாகசங்கள் மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாப் பரிமாணங்களில் தீவு நாடென்ற வகையில் இலங்கை ஊக்குவிக்கப்படலாம். தமிழ்நாடு சுற்றுலா அமைச்சின்  உதவியுடன், சென்னையில் இலங்கை கலாச்சார நிகழ்ச்சி மற்றும் உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்வது குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 ஆகஸ்ட் 29

Please follow and like us:

Close