டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 'தைப் பொங்கல்' கொண்டாட்டம்

டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ‘தைப் பொங்கல்’ கொண்டாட்டம்

ஜப்பானில் உள்ள இலங்கை மாணவர் சங்கத்துடன் இணைந்து தூதரகம் 'தைப் பொங்கல்' விழாவை ஒரு கலப்பின வடிவில் 2022 ஜனவரி 13ஆந் திகதி தூதரக வளாகத்தில் கொண்டாடியது. 'தைப் பொங்கலின்' முக்கியத்துவத்தை சித்தரிக்கும் சிறிய அறிமுகம், பாரம்பரிய எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் வணக்கத்திற்குரிய கலாநிதி பரங்கம சீவலி தம்ம தேரரின் தம்ம பிரசங்கம் ஆகியவற்றுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இன நல்லிணக்கத்தை சித்தரிக்கும் 'அபிட ரடக்' என்ற பெயரில் ஒரு சிறிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஜப்பானில் வாழும் மாணவர்களால் தமிழ் மற்றும் சிங்கள நாட்டுப்புறப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இலங்கையிலிருந்து இரண்டு மாணவர்களின் மெய்நிகர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வை ஜப்பானில் உள்ள அனைத்து இலங்கை சங்கங்களின் பிரதிநிதிகளும் கண்டுகளித்ததுடன், பலர் ஸூம் தளம் ஊடாக இணைந்து கொண்டனர்.

2200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சங்க காலம் முதல் 'தைப் பொங்கல்' கொண்டாடப்பட்டு வருவதன் வரலாற்று முக்கியத்துவத்தை தூதுவர் விளக்கினார். இலங்கை பல்லின மற்றும் பல மத சமூகத்தைக் கொண்டதொரு நாடாக இருப்பதால் அனைத்து மதங்கள் மற்றும் இனங்களின் பாரம்பரியங்களைக் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

இலங்கைத் தூதரகம்,

டோக்கியோ

2022 ஜனவரி 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close