'டயமண்ட் ப்ரின்சஸ்' கப்பற்குழு உறுப்பினர்களிலுள்ள இலங்கையர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்

‘டயமண்ட் ப்ரின்சஸ்’ கப்பற்குழு உறுப்பினர்களிலுள்ள இலங்கையர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்

ஜப்பான் யோகோஹாமாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் இரண்டு இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து 'டயமண்ட் ப்ரின்சஸ்' கப்பலின் நிறுவனத்துடன் டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது. குழு உறுப்பினர்களாக இருக்கும் இரு இலங்கையர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் தற்போது 454 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜப்பானில் கனகவா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பயணிகளை இறக்குவதற்கு, பெப்ரவரி 19 மற்றும் 20 ஆந் திகதிக்குள் அமையும் வகையிலான 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியை கப்பல் நிறுவனம் பூர்த்தி செய்தல் வேண்டும். எனினும், குழு உறுப்பினர்கள் மேலதிகமானதொரு காலப்பகுதிக்கு தேவைக்கேற்ப தனிமைப்படுத்தப்படுவார்கள்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
18 பெப்ரவரி 2020
Please follow and like us:

Close