
அக்டோபர் 01ஆந் திகதி சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில், ஜோர்தானின் தபர்பூரில் உள்ள எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமத்தில் உள்ள சிறுவர்களை இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் மற்றும் ஊழியர்கள் சந்தித்தனர். 1 முதல் 16 வயது வரையிலான ஐம்பத்தொரு சிறுவர்கள் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாயாஜால நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர்.
சிறுவர்களுக்கான பரிசுப் பொருட்களை தூதுவர் ஷானிகா திசாநாயக்க மற்றும் ஊழியர்கள் வழங்கி வைத்தனர். மேலும் எஸ்.ஓ.எஸ். கிராமத்தின் நூலகத்திற்கு பலகை விளையாட்டுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. தபார்பூரில் உள்ள எஸ்.ஓ.எஸ். கிராமம் அனாதைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பின்னணியைச் சேர்ந்த சிறுவர்களுக்கான இல்லம் ஆகும்.
தூதரக ஊழியர்கள் சிறுவர்களுக்கு பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை வழங்கி வைத்ததுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இலங்கைத் தூதரகம்,
ஜோர்தான்
2021 அக்டோபர் 08





