ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகம் அரபிகா கோப்பி விழிப்புணர்வு ஊக்குவிப்புக்கு ஏற்பாடு

ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகம் அரபிகா கோப்பி விழிப்புணர்வு ஊக்குவிப்புக்கு ஏற்பாடு

உயர்தரமான இலங்கை அரபிகா கோப்பியை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்துவதற்காக, ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்டானிய கோப்பி இறக்குமதியாளர்கள் மற்றும் கோப்பிக் கடை உரிமையாளர்களுக்காக, 2022 மார்ச் 23ஆந் திகதி, இலங்கை அரபிகா கோப்பி ருசிக்கும் பட்டறையை ஏற்பாடு செய்தது. இந்த செயலமர்வில் கியோட்டா கோப்பி நிறுவனம், ஹிண்ட் நுவரெலியா மற்றும் டி.எஃப்.சி. ரோஸ்டர்ஸ் ஆகிய மூன்று இலங்கை ஏற்றுமதியாளர்களால் அரபிகா மற்றும் ரொபஸ்டா பீன்ஸ் மற்றும் அரபிகா கோப்பித் தூள் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜோர்டானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானிகா திஸாநாயக்க, இலங்கையில் நிலையான முறையில் வளர்க்கப்படும் அரபிகா கோப்பி மற்றும் அரேபிகா மற்றும் ரொபஸ்டா கோப்பி ஆகிய இரண்டும் பயிரிடப்படும் பகுதிகள் குறித்து விரிவான விளக்கமளித்தார். பல ஜோர்டானியர்கள் கோப்பி பிரியர்களாக இருப்பதால் இலங்கைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சாரப் பாலமாக இலங்கைக் கோப்பி மாறுவதை தான் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தூதுவர் குறிப்பிட்டார். தூதரகத்தால் பணியமர்த்தப்பட்ட பரிஸ்டா மூலம் உணர்ச்சி அனுபவத்திற்கான நேரடி விளக்கக்காட்சி மற்றும் ருசித்தல் அமர்வு ஆகியவற்றுடன் விளக்கக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இறக்குமதியாளர்கள் வறுத்த மற்றும் வறுக்கப்படாத விஷேட கோப்பிகளை மாதிரி செய்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கோப்பிக் கொட்டைகளை சுவைக்க முடிந்தது.

உயர்தர அரேபிகா கோப்பிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கையை முன்னிலைப்படுத்துவதற்காக மட்டுமன்றி இலங்கைக் கோப்பி ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தும் பெறுமதி சேர்க்கப்பட்ட பொதிகளை காட்சிப்படுத்துவதற்காகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவற்றில் சில வால்வுடன் கூடிய கோப்பிக் பை மற்றும் ஒட்சிசன் மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் படலம் கொண்ட பொதியிடல் மற்றும் நறுமணத் தடுப்புக் குப்பி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.

இலங்கைத் தூதரகம்,

ஜோர்டான்

2022 ஏப்ரல் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close