ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் பக்க அம்சமாக வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபாடு

 ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் பக்க அம்சமாக வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபாடு

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி பத்ஷேபா நெல் க்ரோக்கர், ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தரப் பிரதிநிதி சைமன் மேன்லி, ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி எஸ்மாயில்  பிகே ஹமானே மற்றும் ஈரான் நீதித்துறையின் பிரதித் தலைவர் கலாநிதி. கசென் கரிபாபாடி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இதன்போது அமைச்சருடன் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 04

Please follow and like us:

Close