பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் தேவையான நிதிகளை சேகரித்து, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இலங்கையிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பயன்படுத்தும் வகையில் 8 ஒட்சிசன் செறிவூட்டல் கருவிகளை வழங்கியது.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. உற்பத்தி, விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இந்த நன்கொடையை கையளித்தார்.
நன்கொடையை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோயின் போது உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நிதி திரட்டுவதற்கான தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 நவம்பர் 18