ஜப்பானுடனான இருதரப்பு ஆலோசனைகளை இலங்கை நிறைவு

ஜப்பானுடனான இருதரப்பு ஆலோசனைகளை இலங்கை நிறைவு

வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரப் பிரிவின் உதவி அமைச்சர் கானோ டேகிரோ தலைமையிலான ஜப்பான் வெளிவிவகார  அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனான இருதரப்பு ஆலோசனைகளில், 2022 ஜூலை 15ஆந் திகதி, வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதுக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

இருதரப்பு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு  இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூலை 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close