டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜூன் 25ஆந் திகதி, சனிக்கிழமையன்று ஒசாகாவில் உள்ள உமேடா ஸ்கை கட்டிடத்தில் நடமாடும் கொன்சியூலர் சேவையை நடாத்தியது. கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல், சான்றொப்பம், வாக்குமூலங்கள் மற்றும் ஏனைய கொன்சியூலர் சேவைகள் உள்ளிட்ட இந்த சேவையின் மூலம் வழங்கப்பட்ட வசதிகளால் 50க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த நடமாடும் கொன்சியூலர் சேவை இலங்கையர்களுக்காக காலை 09.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருந்தது. ஒசாகா, ஹியோகோ, நகோயா, நாரா மற்றும் கியோட்டோ மற்றும் ஐச்சி மாகாணங்களில் வசிக்கும் இலங்கை மாணவர்கள் உட்பட இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினர் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.
கொன்சியூலர் சேவையில் அமைச்சர் ஆலோசகர் மற்றும் தூதரக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஜப்பானில் உள்ள இலங்கை வாகன சங்கம் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியது.
இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2022 ஜூலை 04