லக்சல கைவினைப்பொருட்களுக்கான உரிமையளித்தல் ஒப்பந்தத்தில் சலா எண்டர்பிரைசஸ் 2021 அக்டோபர் 06ஆந் திகதி, புதன்கிழமை கைச்சாத்திட்டது. கோரிக்கைகளைப் பெற்ற இரண்டு மாதங்களுக்குள் மூன்று பொருத்தமான வேட்பாளர்களை ஆரம்ப உரிமையாளராகக் கண்டறிவதில் ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் முக்கிய பங்கு வகித்தது. தற்போது லக்சல கைவினைப் பொருட்களை எடுத்துச் செல்லும் முதல் உரிமையாளராக 100மூ இலங்கைத் தயாரிப்புக்களை எடுத்துச் செல்லும் எம் அன்ட் ஜே சில்லறை விற்பனை நிலையங்களுடன் ஒத்துழைப்பதற்கு ஜப்பானில் லக்சலவின் முதன்மை உரிமையாளராக சலா எண்டர்பிரைசஸ் தீர்மானித்துள்ளது. எம் அன்ட் ஜே குழுமத்தின் சமீபத்திய சில்லறை விற்பனைக் கடைத்தொகுதிகள் சில வாரங்களுக்கு முன்னர் நரிடாவில் உள்ள ஏயொன் மோலில் திறக்கப்பட்டதுடன், அங்கு பெரிய அளவிலான இத்தாலிய உணவகமும் அவர்களால் இயக்கப்படுகின்றது. எம் அன்ட் ஜே ஜப்பானில் அனைத்து லக்சல இணையவழி விற்பனையின் கப்பல் போக்குவரத்து அம்சங்களையும் எளிதாக்கும். சலா எண்டர்பிரைசஸ் என்பது ஜப்பானிய நுகர்வோருக்காக உருவாக்கப்பட்ட ஜப்பானிய மொழி லக்சல தயாரிப்புக்களின் வலைத்தளத்தைத் தொடங்குவதற்கான முதன்மை உரிமையாளர் திட்டமாகும்.
லக்சல ஜப்பானுக்குள் கொண்டு செல்லும் 50,000 க்கும் மேற்பட்ட இலங்கைப் பொருட்களை சில்லறை விற்பனை செய்து, விநியோகிப்பதற்காக அதிகமான இலங்கைக் கூட்டமைப்புப் பங்காளர்களை நாடுகின்றது. ஜப்பானில் லக்சல தயாரிப்புக்களை விநியோகிக்க விரும்பும் ஆர்வமுள்ள தரப்பினர்கள் இருப்பின், இந்தத் தூதரகத்தின் வணிகச் செயலாளர் திரு. கபில ஜே. குமாரவை com@lankaembassy.jp இல் தொடர்பு கொள்ளவும்.
பெரும்பாலான இலங்கைத் தயாரிப்புகளுக்கு ஜப்பானில் சில வரிக் கட்டணங்கள் இருப்பினும், பெரும்பாலான லக்சல கைவினைப் பொருட்கள் எச்.எஸ். குறியீடுகளின் கீழ் வருவதுடன், அவை பூஜ்ஜிய அல்லது மிகக் குறைந்த கட்டணத்தைக் கொண்டுள்ளது. இது நிச்சயமாக இலங்கைக்கு சாதகமானதாகும்.
இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2021 அக்டோபர் 08