ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை

 

 ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா 2024, மே 04-05 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை  நிமித்தமாக சந்திக்க உள்ளார். இவ்விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

ஜப்பான் வெளியுறவு அமைச்சருடன்  அவ்வமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்துகொள்ள உள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024, ஏப்ரல் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close