ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஜூலை 20 - 21ஆந் திகதிகளில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளும் கொன்சியூலர்  உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் ஏனைய இந்திய உயர் அதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றமடையச் செய்து,  பலப்படுத்தும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜூலை 18

Please follow and like us:

Close