ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன மக்கள் குடியரசிற்கு, 2025, ஜனவரி 14 முதல் 17 வரையிலான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதியின், சீன மக்கள் குடியரசிற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜனவரி 11
Please follow and like us: