சுற்றுலா மேம்பாட்டில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல்: சுதந்திரப் பயண முகவர் தேசிய சங்கங்களுக்கான என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸின் விளக்கக்காட்சி

சுற்றுலா மேம்பாட்டில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல்: சுதந்திரப் பயண முகவர் தேசிய சங்கங்களுக்கான என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸின் விளக்கக்காட்சி

2021ஆம் ஆண்டு டிசம்பர் 04ஆந் திகதி நடைபெற்ற தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் கலப்பினப் பதிப்பில், கூட்டு நிகழ்வுப் பங்காளிகளாக வெற்றிகரமாகப் பங்கேற்றதன் மூலம், இலங்கைப் பங்கேற்பாளர்களின் வேண்டுகோளின் பேரில், 2021 டிசம்பர் 21ஆந் திகதி என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸ் உடன் இணைந்து, தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கத்தின் உறுப்பினர்களுடனான பிரத்தியேகமான மெய்நிகர் விளக்கக்காட்சியை ஏற்பாடு செய்வதற்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உதவியது. ஒரு மணி நேர அமர்வில் இருபத்தைந்து (25) பிலிப்பைன்ஸ் பயண முகவர்கள் பங்கேற்றனர்.

என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்;ஸ் முகாமையாளர் மலிந்த சமரசேகர இலங்கை சுற்றுலாத் துறையின் தற்போதைய முன்னேற்றங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான நடைமுறையில் உள்ள நுழைவு நெறிமுறைகள் மற்றும் என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸ் பயணப் பொதிகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார். பரஸ்பர நன்மை பயக்கும் வணிக ஈடுபாடுகளின் மூலம் பிலிப்பைன்ஸிலிருந்து தமது சந்தையை விரிவுபடுத்துவதில் பிலிப்பைன்ஸ் பயண முகவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிறுவனத்தின் ஆர்வத்தையும் அவர் விரிவாகக் குறிப்பிட்டார்.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து ஒரு ஊடாடும் கேள்வி மற்றும் பதில் அமர்வ இடம்பெற்றதுடன், அதில் சுற்றுலாத் தலங்கள், தொகுப்புக்கள், விலை நிர்ணயம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பிலிப்பைன்ஸ் பயண முகவர்கள் விசாரணை செய்;தனர்.

இதற்கிடையில், சுதந்திரப் பயண முகவர் தேசிய சங்கத்தின் தலைவர் புளோரன்ஸ் ரிவேரா, இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதில் பிலிப்பைன்ஸ் பயண முகவர்கள் மற்றும் பயணிகளுடன் இணைக்கும் என்.கே.ஏ.ஆர்.இன் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தற்காலிகமாக தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கத்தின் பொது உறுப்பினர் மற்றும் வணிகக் கூட்டத்தை இலங்கையில் நடாத்துவதற்காக முன்மொழியப்பட்ட பழக்கவழக்க சுற்றுப்பயணத்தில் தூதரகம் தற்போது குறித்த சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது.

தொற்றுநோய்க்கு முன்னர், ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னரும் கூட, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா வருகையுடன் ஆசியான் அண்டை நாடுகளில் பிலிப்பைன்ஸ் முன்னணித் தரவரிசையில் இருந்தது.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2021 டிசம்பர் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close