சீசெல்சஸின் போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு அந்தோனி டெர்ஜாக்ஸை 2021 அக்டோபர் 01ஆந் திகதி, வெள்ளிக்கிழமை சந்தித்த சீசெல்சஸ் குடியரசிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஸ்ரீமல் விக்கிரமசிங்க, சீஷெல்ஸ் குடியரசிலுள்ள போக்குவரத்துத் துறைக்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடினார்.
கடல்வழி மற்றும் விமானத் துறையின் வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதிகள் ஏனைய பகுதிகளுக்குள் ஒத்துழைப்புடன் இணைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பானது, குறிப்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டது.
இந்த கோவிட்-19 சகாப்தத்தின் சவால்களை எதிர்கொள்வதற்காக உலகம் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றமையினால், போக்குவரத்துத் துறையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக, இணைப்பு மற்றும் வலையமைப்பின் முக்கியத்துவத்தை மாண்புமிகு அமைச்சர் வலியுறுத்தினார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
விக்டோரியா
2021 அக்டோபர் 08