சீசெல்ஸ் துணை சனாதிபதி சனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்

சீசெல்ஸ் துணை சனாதிபதி சனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்

சீசெல்ஸ் குடியரசின் துணை சனாதிபதியான வின்சன்ட் மெரிடன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தால் சீசெல்ஸ் அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு  வேவ் ரைடர் இன்சோர் ரோந்து கப்பல்களை (WRIPC) பொறுப்பேற்பதற்காக  2019 சனவரி 30ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ரோந்து கப்பல்களை வழங்கும் வைபவவமானது மேற்கு கடற்படை கட்டளைத் தலைமை அலுவலகத்தில் 2019 பெப்ரவரி 01ஆம் திகதி  இடம்பெறும்.

இலங்கை சீசெல்ஸ் நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடைவதையிட்டு  அதிமேதகு சனாதிபதி சீசெல்ஸ் குடியரசிற்கு  2018 ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சீசெல்ஸ் சனாதிபதி மற்றும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்தையின் போது சீசெல்ஸ் சனாதிபதி டனி போரெ விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை அரசாங்கமானது இந்த நன்கொடை ஏற்பாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

நிர்மாண பணிகளை இலங்கை கடற்படை பொறுப்பேற்றிருந்ததுடன் இந்த வைபவமானது பெப்ரவரி 01ம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும்  கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, சனாதிபதியின் செயலாளர் மற்றும் சீசெல்சின் கொழும்புக்கான உயர் ஸ்தானிகர் ஆகியோர் பங்கேற்புடன் ஜனாதிபதி சிறிசேனவினால் சிறப்பிக்கப்படவுள்ளது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 சனவரி 31

 

Please follow and like us:

Close