சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ சியங் லூங் அவர்கள் 2018 ஜனவரி 22 தொடக்கம் 24 ஆந்திகதி வரை மேற்கொண்ட இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில்இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும், சிங்கப்பூர் குடியரசுக்கும்இடையிலான கூட்டறிக்கை

சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ சியங் லூங் அவர்கள் 2018 ஜனவரி 22 தொடக்கம் 24 ஆந்திகதி வரை மேற்கொண்ட இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில்இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும், சிங்கப்பூர் குடியரசுக்கும்இடையிலான கூட்டறிக்கை

Singapore

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பிற்கிணங்க, சிங்கப்பூர் குடியரசின் பிரதம மந்திரி லீ சியன் லூங் அவர்கள் 2018 ஜனவரி 22 தொடக்கம் 24 ஆந் திகதி வரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

2018 ஜனவரி 23 ஆந் திகதி இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதம மந்திரி லீ ஆகியோர் இலங்கைக்கும், சிங்கப்பூருக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியதுடன், முக்கியமான பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நெருங்கிய வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளடங்கலாக இரு நாடுகளுக்குமிடையிலான இனிய நட்புறவு குறித்தும், உயர் மக்கள்-மக்கள் தொடர்புகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் அவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மற்றும் பொதுத்துறை திறன் கட்டியெழுப்பல் ஆகிய பிரிவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினர். பிரதம மந்திரி லீ அவர்கள், இலங்கையானது ASEAN மற்றும் ASEAN பிராந்திய மன்றத்தில் அதன் ஈடுபாட்டினை அதிகரிப்பதற்கு ஊக்குவித்தார்.

இந்த சந்திப்பினைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும் விளைவுகள் மற்றும் அர்த்தமுள்ள கடமைப்பாடுகளுடன் கூடிய விரிவானதும், முன்னோக்கியதுமான இலங்கை-சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை(SLSFTA) கைச்சாத்திடப்பட்டதை ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதம மந்திரி லீ ஆகியோர் அவதானித்தனர். வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கியத்துவம் குறித்து தலைவர்கள் சுட்டிக்காட்டியதுடன், SLSFTA மற்றும் வர்த்தகங்களுக்கிடையிலான அதிகரித்த உரையாடல் ஆகியன இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் ஆழமாக்கிக்கொள்ளும் என்பதில் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதம மந்திரி லீ ஆகியோரும் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் முக்கிய அபிவிருத்தி துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை விஸ்தரிப்பதன் ஊடாக இலங்கையும், சிங்கப்பூரும் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து கலந்துரையாடினர். 2018 ஜுலை மாதம் நடைபெறவுள்ள சிங்கப்பூர் சர்வதேச நீர் வாரம், உலக நகரங்கள் உச்சிமாநாடு மற்றும் சிங்கப்பூர் தூய்மையான சூழல் உச்சிமாநாடு ஆகியவற்றில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரதம மந்திரி லீயின் அழைப்பினை பிரதம மந்திரி விக்ரமசிங்க அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது தனக்கும், தனது தூதுக் குழுவிற்கும் அளித்த இனிய, பெருந்தன்மையான உபசாரத்திற்கு ஜனாதிபதி சிறிசேன அவர்களிற்கு பிரதம மந்திரி லீ அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு, ஜனாதிபதி சிறிசேன அவர்களை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பொன்றையும் விடுத்தார்.

கொழும்பு
2018 ஜனவரி 23 ஆந் திகதி
Please follow and like us:

Close