ஒஸ்ட்ரியாவின் சால்ஸ்பேர்க்கில் இலங்கையின் கௌரவத் தூதுவராக திரு. கிறிஸ்டியன் வின்சரை நியமனம் செய்யும் ஆணையை தூதுவர் மஜிந்த ஜெயசிங்க கையளித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் வின்சர், 1979 இல் பயோ-நஹ்ருங்ஸ்மிட்டலை ஸ்தாபித்த ஒரு முக்கிய தொழில்முனைவோர் ஆவதுடன், இந்த நிறுவனம் சுகாதாரத் தயாரிப்பு நிறுவனமான மெய்ரெடரின் துணை நிறுவனமாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக சால்ஸ்பர்க்கின் சுகாதார மற்றும் இயற்கைப் பொருட்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட இயற்கை உணவுத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகின்றது. இந்தக் குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் ஒஸ்ட்ரியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் இயற்கை உணவு வர்த்தகத்தில் நம்பகமான பங்காளியாக உள்ளது. இந் நிறுவனம் இலங்கையில் இருந்து தேங்காய் சிப்ஸை பெற்றுக் கொள்கின்றது.
ஒஸ்ட்ரியாவின் 4வது பெரிய நகரமாக இருக்கும் சால்ஸ்பர்க் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான பொருளாதார மையமாக விளங்குவதுடன், அங்கு பல உலக சந்தைத் தலைவர்கள் உட்பட புகழ்பெற்ற புதுமையான மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட முன்னணி ஒஸ்ட்ரிய நிறுவனங்கள் தமது தலைமையகத்தை அமைத்துள்ளன. சால்ஸ்பர்க்கின் வரலாற்று மையம் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாகும்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
ஒஸ்ட்ரியா
2022 ஜூலை 08