சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அதன் கிளைகள் முழுவதும்  'இலங்கையின் சுவை' யை தொடங்கி வைப்பு

சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அதன் கிளைகள் முழுவதும்  ‘இலங்கையின் சுவை’ யை தொடங்கி வைப்பு

இலங்கைத் தயாரிப்புக்களுக்கான விளம்பர வாரத்தை சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்  தொடங்கியுள்ளதுடன், சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தின் தொடக்க அமர்வு, அமீர் ஃபவாஸில் உள்ள ஜித்தா பிரதான கிளையில் பதில் துணைத் தூதுவர் திரு. டி.எஃப்.எம். ஆஷிக் அவர்களின் தலைமையில் பிராந்திய முகாமையாளர் - மேற்குப் பிராந்தியம் திரு. ரில்ஸ் முஸ்தபா மற்றும் ஏனைய ஊழியர்களுடன் நடைபெற்றது.

08 - 14 செப்டம்பர் 2021 வரை லுலுவில் நடைபெறும் 'இலங்கையின் சுவை', சவுதி கடை உரிமையாளர்களுக்கு 203  வௌ;வேறு தயாரிப்புக்களை அனுபவிக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றது, குறிப்பாக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, விளம்பர விலையில் வழங்கப்படும் மற்றும் தொடக்க நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 புதிய இலங்கைப் பொருட்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைத் தயாரிப்புகளில் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பல  இயற்கைப் பொருட்கள் அடங்குவதுடன், இவை சவுதி அரேபியாவில் அபிவிருத்தியடைந்து வரும் சந்தையாக விளங்குவதுடன், இலங்கையின் இயற்கைப் பொருட்கள் சவுதி அரேபியாவில் உள்ள நுகர்வோர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.

மேலும், லுலு ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி இலங்கையிலிருந்து அதிகமான பொருட்களை 04 ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 1 எக்ஸ்பிரஸ் முதல் 08 ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சவுதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் 1  எக்ஸ்பிரஸ் வரை விரிவுபடுத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை உற்பத்திகளுக்கு அதிக இடத்தை வழங்கும்.

இலங்கையின துணைத் தூதரகம்

ஜித்தா,

2021 செப்டம்பர் 15

Please follow and like us:

Close