சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரத்தை செயற்படுத்துவதிலான வெற்றிகள் மற்றும் சவால்கள் பற்றிய மதிப்புமிக்க கள ஆய்வுகளை இலங்கை வழங்கியுள்ளது - வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க

சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரத்தை செயற்படுத்துவதிலான வெற்றிகள் மற்றும் சவால்கள் பற்றிய மதிப்புமிக்க கள ஆய்வுகளை இலங்கை வழங்கியுள்ளது – வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க

IHL Conference - Pix 1-min

 

கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கை சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனிதாபிமான இராஜதந்திரத்தை செயற்படுத்துவதில் கிடைத்த வெற்றிகள் மற்றும் அதற்கான சவால்களிலான மதிப்புமிக்க கள ஆய்வுகளை உலகிற்கு வழங்கியுள்ளதுடன், அவற்றுள் பலவற்றுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மதிப்புமிக்க பங்காளியாக இருந்துள்ளது என வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு, 2019 நவம்பர் 11 - 13 வரை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில், 'செயற்பாட்டில் சர்வதேச மனிதாபிமான சட்டம்: தடுப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய ஒரு சுருக்கம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான 9 வது தெற்காசிய பிராந்திய மாநாட்டில் தொடக்க அறிக்கையை வழங்கியபோது வெளிவிவகார செயலாளர் திங்களன்று (11 நவம்பர் 2019) இதனை குறிப்பிட்டார். சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சிறப்புரையாற்றிய அதே வேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூதுக்குழுவின் தலைவர் லூகாஸ் பெட்ரிடிஸ் மற்றும் ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆலோசனை சேவைத் தலைவர் ஆகியோரும் இந்த ஒன்றுகூடலின் போது உரையாற்றினர். இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இலங்கையின் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீதான சர்வதேச உறுதிப்பாட்டின் ஆரம்ப வெளிப்பாடாக கருதப்படும் வகையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனான ஒப்பந்தத்தில் இலங்கை 1989 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது என திரு. ஆரியசிங்க சுட்டிக்காட்டினார். 'பாதுகாப்பிற்கான' உறுதிப்பாட்டில் இலங்கையின் அனுபவமானது, வடக்கு மற்றும் கிழக்கிற்கான உணவுப் படையினர் மூலமாகவும், 30 ஆண்டுகால பிரிவினைவாத பயங்கரவாத மோதல்களின் போது பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் உள்ளடங்கலாக மேற்கொள்ளப்பட்ட தேசிய எதிர்ப்புத் திட்டத்தின் 100% முன்னெடுப்பு மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2004 சுனாமியின் பின்னரான விரைவான பிரதிபலிப்பு, மோதலுக்கு பிந்தைய காலகட்டத்திலான நிலக்கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிகள், ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்குமான மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தடையின்றிய அணுகல் ஆகியன ஏனைய விடயப்பரப்புக்களில் உள்ளடங்கும்.

மேலும், நிராயுதபாணியாக்கம் மற்றும் ஆயுதரப்பரவலைத் தவிர்க்கும் துறையில், மோதலின் அழிவுகரமான விளைவுகளைத் தடுப்பதிலும், தணிப்பதிலும் இலங்கை அதன் சர்வதேச வாதத்தில் முன்னணியில் இருந்ததுடன், 2015 ஆம் ஆண்டில், அபாயகரமான தானியங்கி ஆயுத அமைப்புகள் தொடர்பான கலந்துரையாடல்களை அரச மட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஒருமித்த கருத்தை, சில வழக்கமான ஆயுதங்களுக்கான மாநாட்டின் அரச தரப்பினர்கள் கூட்டத்திற்கான தனது தலைமைத்துவக் காலத்தில் உருவாக்கியிருந்தது. தேசிய தடையை ஏற்படுத்துவதில் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான திறன்களைக் கொண்ட அரசுகளை இலங்கை ஊக்குவித்துள்ள அதே நேரத்தில், ஒழுங்குமுறை விதிமுறைகளை அர்த்தமுள்ள மனிதக் கட்டுப்பாட்டுடன் அதன் மைய உந்துதலாக வழங்குவது பிணைப்புள்ளதொரு சட்டக் கட்டமைப்பின் பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்தியது.

1957 முதல் உலகெங்கிலும் உள்ள ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கைப் படைகள் பங்கேற்பதன் மூலமாகவும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு குறித்த மனிதாபிமானமிக்க பார்வை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என செயலாளர் குறிப்பிட்டார். பயங்கரவாதக் குழுக்களுடனான குறைந்தளவிலான மற்றும் அதிகளவிலான தீவிர மோதல்களில் இலங்கையின் சமீபத்திய கால அனுபவத்தைப் பொறுத்தவரை, அமைதி காத்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்ற அனைத்து அம்சங்களிலும் விரிவான தொழில் அனுபவமுள்ள இலங்கை அனுப்பிய துருப்புக்களுக்கு பொருத்தமாக சில நாடுகளின் துருப்புக்களின் தரம் அமைய முடியுமென்பதுடன், மிகவும் அண்மையில் மாலியில் உட்பட கடந்து செல்லும் ஒவ்வொரு நாளையும் எடுத்துக்காட்டுகின்றது.

1940 களில் ஜெனீவா உடன்படிக்கைகள் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட சூழலைக் காட்டிலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கொள்கைகள் ஆயுத மோதல்களின் தற்போதைய சூழலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என திரு. ஆரியசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களைப் போலல்லாமல், தற்போது மோதல்கள் பெரும்பாலும் உள்ளக ஆயுத மோதல்களாக, பொதுவாக அதிகம் நீடித்த மற்றும் பெரும்பாலும் அரசு சாராத செயற்பாட்டாளர்களை உள்ளடக்குவதுடன், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பின்னணியில் மனிதக் கட்டுப்பாட்டுக்கு எதிரான இயந்திரத்தின் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவு சர்ச்சையில் இருக்கும் சட்டங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அவை வழக்கமான போர் செயன்முறையிலிருந்து நகர்ப்புற அமைப்புகளுக்கு நகர்ந்துள்ளதுடன், ஆயுத மோதல்களில் விகிதாசாரத்தின் கொள்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரின் எண்ணக்கரு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தங்கள் சட்டபூர்வமான கடமைகளுக்கு கட்டுப்படுவதற்கான அரசுகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் நடைமுறைத் திறன் தொடர்பான பிரச்சினைகள் ஆகியன கடுமையாக போட்டியிடுகின்றன. சர்வதேச ஆயுதமற்ற மோதல்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை, அனைத்து தரப்பினரும் மோதலொன்றுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்தை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதிலான கடுமையான தடைகள் போன்றன அரசு மற்றும் அரசு சாராத செயற்பாட்டாளர்களிடையேயான சமத்துவம் பற்றிய கேள்வியாக விளங்குகின்றது.

சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் பல்வேறு சூழல்களில் அதன் பயன்பாடு குறித்த முன்னோக்குகளைப் பற்றி விவாதிப்பதில், இலங்கை எதிர்கொள்ளும் வெற்றிகளும் சவால்களும் எதிரொலிப்பதாகவும், அறிவுறுத்துவதாகவும் அமைய வேண்டும் என செயலாளர் ஆரியசிங்க பங்கேற்பாளர்களிடம் குறிப்பிட்டார். 'சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது பணியில் 'நடுநிலைமையை' போற்றத்தக்க வகையில் உறுதி செய்துள்ளது' என்று குறிப்பிட்ட அவர், 'சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பயன்பாட்டை அரசியல்மயமாக்குவதில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார். எந்தவொரு தீர்வும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதாக அமையாது என்பதுடன் மோதல் சூழ்நிலையை மதிப்பிடுவதில் சரியான சமநிலையைக் கண்டறிவதில் உள்ளூர் உணர்திறன் மற்றும் நுணுக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பல நாடுகள் அரசியலற்ற மற்றும் வசதியான ஆரோக்கியமானதொரு உரையாடலைப் பேணி, நாடுகள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக 'பெயரிடுதல் மற்றும் வெட்கமடைதலை' தடுப்பதற்கு வலியுறுத்திய ஜெனீவா சாசனங்களுக்கான உயர் ஒப்பந்தத் தரப்பினர்களின் 32 வது கூட்டத்தின் நிறைவிலிருந்து தொடர்ந்தும் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் இது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. மனிதாபிமான இராஜதந்திரத்தில் ஈடுபடுவதிலும், மனிதத் துன்பங்களைத் தளர்த்துவதிலும் இது எமது எல்லா நாடுகளுக்கும் சிறந்த சேவையை வழங்கும் என அவர் தெரிவித்தார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
12 நவம்பர் 2019

IHL Conference - Pix 2-min

------------------------------------

මාධ්‍ය නිවේදනය

ජාත්‍යන්තර මානූෂීය නීතිය හා මානූෂීය රාජ්‍යතාන්ත්‍රික කටයුතු ක්‍රියාත්මක කිරීමේ දී අත්කර ගෙන ඇති සාර්ථකත්වය හා එහි දී හමු වූ අභියෝග පිළිබඳ වටිනා සිද්ධි අධ්‍යයන ශ්‍රී ලංකාව ලබා දී තිබේ - විදේශ ලේකම් ආර්යසිංහ මහතා

ජාත්‍යන්තර මානුෂීය නීතිය (IHL) හා මානුෂීය රාජ්‍යතාන්ත්‍රික කටයුතු ක්‍රියාත්මක කිරීමේ දී අත්කර ගෙන ඇති සාර්ථකත්වය හා එසේ ක්‍රියාත්මක කිරීමේ දී හමු වූ අභියෝග පිළිබඳව ශ්‍රී ලංකාව පසුගිය දශක හතරක් පුරා ලෝකයට වටිනා සිද්ධි අධ්‍යයන ලබා දී ඇති බවත් බොහෝ දේ සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර රතු කුරුස කමිටුව (ICRC) වටිනා හවුල්කරුවෙකු වී තිබෙන බවත් විදේශ ලේකම් රවිනාථ ආර්යසිංහ මහතා ප්‍රකාශ කළේය.

විදේශ ලේකම්වරයා විසින් මෙසේ ප්‍රකාශ කරන ලද්දේ, කොළඹ ජාත්‍යන්තර රතු කුරුස කමිටුව, ශ්‍රී ලංකා රජය සමඟ එක්ව 2019 නොවැම්බර් 11-13 දිනවලදී කොළඹ, ගෝල් ෆේස් හෝටලයේ දී, සංවිධානය කරන ලද ජාත්‍යන්තර මානුෂීය නීතිය (IHL) - "ජාත්‍යන්තර මානුෂීය නීතිය ක්‍රියාත්මකව පවතියි: වැළැක්වීම හා ආරක්ෂාව පිළිබඳ විස්තරයක්", සම්බන්ධයෙන් 9 වැනි දකුණු ආසියානු කළාපීය සමුළුවේ  ආරම්භක  ප්‍රකාශය සිදු කරමිණි. මෙහි ප්‍රධාන දේශනය නීතිපති දප්පුල ද ලිවේරා මහතා විසින් පවත්වන ලද අතර ජාත්‍යන්තර රතු කුරුස කමිටුවේ නියෝජිත ප්‍රධානි ලූකස් පෙට්‍රිඩිස් මහතා සහ ජිනීවා හි ජාත්‍යන්තර රතු කුරුස කමිටුවේ උපදේශන සේවා ප්‍රධානී විසින් මෙම හමුව අමතන ලදී. මෙම සමුළුවට ඇෆ්ගනිස්ථානය, බංග්ලාදේශය, භූතානය, ඉන්දියාව, ඉරානය, නේපාලය, මාලදිවයින, පාකිස්ථානය සහ ශ්‍රී ලංකාව යන රටවල රාජ්‍ය නියෝජිතයෝ සහභාගී වෙති.

1989 වසරේ දී ශ්‍රී ලංකාව ජාත්‍යන්තර රතු කුරුස කමිටුව සමඟ ගිවිසුමට අත්සන් තැබීම මඟින් ශ්‍රී ලංකාව බොහෝවිට ජාත්‍යන්තර මානුෂීය නීතියට ජාත්‍යන්තර වශයෙන් එකල දැක්වූ ඇප කැපවීම පිළිබිඹු වනු ඇතැයි ආර්යසිංහ මහතා ප්‍රකාශ කළේය. "ආරක්ෂාව" උදෙසා ජාත්‍යන්තර මානුෂීය  නීතියේ ඇප කැපවීම සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාව ලද අත්දැකීම්වලට, උතුරු හා නැගෙනහිර ප්‍රදේශවලට ආහාර සැපයුම හා වසර 30කට ආසන්න කාලයක් පුරා බෙදුම්වාදී ත්‍රස්තවාදී ගැටුම පැවති අවධියේ දී ත්‍රස්තවාදීන් සිටි ප්‍රදේශ ද ඇතුළු ප්‍රදේශවල ජාතික ප්‍රතිශක්තිකරණ වැඩසටහන 100%කින් ආවරණය කිරීම අයත් වෙයි. 2004 වසරේ ඇති වූ සුනාමි ව්‍යවසනයේ දී ඒ සඳහා කඩිනමින් ප්‍රතිචාර දැක්වීම, පශ්චාත් ගැටුම් සමයේ දී බිම්බෝම්බ ඉවත් කිරීම හා නැවත පදිංචි කිරීම, අතුරුදන් කරවීමේ ගැටලුවට විසඳුම් ලබා දීමේ ප්‍රයත්න හා ඉන් අනතුරුව අතුරුදහන් වූ පුද්ගලයන් පිළිබඳ කාර්යාලයේ (OHP) වැඩකටයුතු, අප රටේ සියලුම රැඳවුම් ස්ථානවලට බාධා රහිත ප්‍රවේශයක් ජාත්‍යන්තර රතු කුරුස කමිටුවට ලබාදීම සහ පාස්කු ඉරුදින එල්ල වූ බෝම්බ ප්‍රහාරවලින් පසුව ශ්‍රී ලංකාවේ ස්ථානගත කොට තිබූ සරණාගතයින්ගේ සහ රැකවරණය පතන්නන්ගේ අභිලාෂයන් ආරක්ෂා කිරීම අනෙකුත් ඇප කැපවීම් අතර වෙයි.

මීට අමතරව, ගැටුමේ විනාශකාරී බලපෑම් වැළැක්වීම හා අඩු කිරීම සම්බන්ධයෙන් හා නිරායුධකරණය හා න්‍යෂ්ටික අවි ගුණනය නොකිරීම යන ක්ෂේත්‍රය සම්බන්ධයෙන් හා  2015 සමහර න්‍යෂ්ටික නොවන අවි (CCW) පිළිබඳ සම්මුතියේ රාජ්‍ය පාර්ශ්ව රැස්වීමේ සහභාගීත්වය දැරූ මෑත කාලයේ දී මාරාන්තික ස්වයංක්‍රීය අවි පද්ධති (LAWS) පිළිබඳ රාජ්‍ය මට්ටමින් සාකච්ඡාවල නියැලීමට එකඟතාවයකට එළඹීම සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාව සිය උපදේශන ලබාදෙමින් පෙරමුණ ගෙන තිබුණි. එහි කේන්ද්‍රීය ගාමක බලය ලෙස අර්ථවත් මානව පාලනයක් සහිත නියාමක ධර්ම සඳහා විධිවිධාන සපයන, බැඳීම් ඇතිකරන  නෛතික රාමුවක් පිළිබඳ සාකච්ඡා අවධාරණය කරන අතරවාරයේ, ජාතික වශයෙන් තාවකාලික තහනම් පනවමින්, වහා පියවර ගැනීම සඳහා මෙම අවි සකසන ලෙස, ශ්‍රී ලංකාව හැකියාවක් ඇති රටවල් දිරිගන්වීය.

1957 සිට ලොව පුරා සිදුකළ එක්සත් ජාතීන්ගේ සාම සාධක මෙහෙයුම් සඳහා ශ්‍රී ලංකා හමුදාවන්ගේ සහභාගීත්වය තුළින්, ආරක්ෂාව සහ නිවාරණය පිළිබඳ මානුෂීය දැක්ම ද ශක්තිමත් වී ඇති බව ලේකම්වරයා සඳහන් කළේය. ත්‍රස්තවාදී කණ්ඩායම් සමඟ පැවති අඩු හා ඉහළ තීව්‍රතාවයකින් යුත් ගැටුම් සම්බන්ධයෙන් මෑත කාලීනව ශ්‍රී ලංකාව ලබා සිටින අත්දැකීම් පිළිබඳව සලකා බලන කල,  ශ්‍රී ලංකාව විසින් යවන ලද භටයින්ගේ සාම සාධක කටයුතු සහ මානුෂීය ආධාර සැපයීම පිළිබඳ සෑම අංශයක් සම්බන්ධයෙන්ම පුළුල් වෘත්තීය පළපුරුද්ද, ඉතා මෑතක දී මාලිහි දී මෙන්ම ගෙවී යන සෑම දිනයක් පාසාම පිළිබිඹු කෙරෙන අතර, එය සමඟ ගුණාත්මකව ගැලපීමට හැකි වන්නේ රටවල් කිහිපයකට පමණි.

ජාත්‍යන්තර මානුෂීය නීතිය පිළිබඳ මූලධර්ම, 1940 ගණන්වල ජිනීවා සම්මුතීන් මුලින් සකස් කරන ලද සමයට වඩා, ප්‍රවේගකාරී, නවීන හා බහුවිධ ස්වරූපයෙන් සිදුවන වර්තමාන සන්නද්ධ ගැටුම්වල සන්දර්භය තුළින් අවබෝධ කර ගත යුතු බව ආර්යසිංහ මහතා පැවසීය. අතීතයේ දී මෙන් නොව, වර්තමානයේ දී සිදුවන සටන්, සාම්ප්‍රදායික යුධපිටිවල සිට නාගරික පරිසර දක්වා පැමිණ ඇති, බොහෝ දුරට සාමාන්‍යයෙන් වඩාත් දිග්ගැස්සුනු, වැඩි වශයෙන් රාජ්‍ය නොවන ක්‍රියාකාරීන් සම්බන්ධ වන, ජාත්‍යන්තර මානුෂීය නීතියෙහි සන්දර්භය තුළ ආරවුලක් බවට පත් වී ඇති පිළිගත හැකි මට්ටමින් මිනිසුන්ට එදිරිව යන්ත්‍ර යෙදවීම මඟින් පාලනය කිරීම පිණිස මාරාන්තික ස්වයංක්‍රීය අවි පද්ධති (LAWS) වැනි නව තාක්‍ෂණයන් භාවිතා කරමින් සිදු කෙරෙන අභ්‍යන්තරික සන්නද්ධ ගැටුම් වන අතර, සන්නද්ධ ගැටුම් පිළිබඳ සමානුපාතිකත්වයේ මූලධර්ම, ත‍්‍රස්තවාදයට එරෙහි ගෝලීය යුද්ධය පිළිබඳ සංකල්පය, ජාත්‍යන්තර මානුෂීය නීතිය යටතේ ඔවුන්ගේ නීතිමය බැඳීම් පිළිපැදීමට‍ රාජ්‍යයන්‍ට සහ සන්නද්ධ කණ්ඩායම්වලට ඇති ප‍්‍රායෝගික හැකියාව පිළිබඳ ගැටලු ද විශාල වශයෙන් විවාදාත්මකය. රාජ්‍ය හා රාජ්‍ය නොවන ක්‍රියාකාරීන් අතර සමානාත්මතාවය පිළිබඳ ගැටලුව සහ ජාත්‍යන්තර නොවන සන්නද්ධ ගැටුම්වල දී (NIACS) ජාත්‍යන්තර මානුෂීය නීතිය අදාළ කර ගත හැකි ද යන්න, සියලු පාර්ශ්වයන් විසින් ජාත්‍යන්තර මානුෂීය නීතියට පූර්ණ ලෙස අනුකූල වීම සහතික කිරීම සඳහා තවදුරටත් බරපතල බාධාවන්ව පවතී.

ජාත්‍යන්තර මානුෂීය නීතිය පිළිබඳ දෘෂ්ටිකෝණයන් සහ විවිධ සන්දර්භයන් තුළ එය භාවිතා කිරීම පිළිබඳව සාකච්ඡා කිරීමේ දී ශ්‍රී ලංකාව මුහුණ දෙන සාර්ථකත්වයන් හා අභියෝගයන් උපදේශාත්මක ලෙස අනුනාද විය යුතු බව ලේකම් ආර්යසිංහ මහතා සහභාගී වූවන්ට පැවසීය. “අන්තර්ජාතික රතුකුරුස කවුන්සිලය සිය කාර්යයන්හි ‘මධ්‍යස්ථභාවය’ ප්‍රශංසනීය ලෙස සහතික කර ඇති බව” සඳහන් කළ ඔහු, “ජාත්‍යන්තර මානුෂීය නීතිය භාවිත කිරීම දේශපාලනීකරණය කිරීම පිළිබඳව සැවොම සැලකිලිමත් වන ලෙස” ඉල්ලා සිටියේය. කිසිදු විසඳුමක් සියලු තත්වයන් සඳහා නොගැලපෙන අතර, ගැටුම්කාරී තත්වයක් තක්සේරු කිරීම පිළිබඳ නිවැරදි සමබරතාවය සොයා ගැනීමේ දී, දේශීය සංවේදීතාවන් සහ සියුම් වෙනස්කම් සැලකිල්ලට ගත යුතුය. බොහෝ රටවල් විසින් “දේශපාලනික නොවන හා රටවල් අතර විශිෂ්ඨ පරිචයන් හුවමාරු කර ගැනීම සඳහා පහසුකම් සපයන, සෞඛ්‍ය සම්පන්න සංවාදයක් පවත්වා ගැනීම පිණිස, ‘නම් කිරීම හා ලජ්ජා කිරීම’ වළක්වා ගන්නා ලෙස” ඉල්ලා සිටින ලද, ජිනීවා සම්මුතීන් පිළිබඳ ඉහළ මට්ටමේ ගිවිසුම්කාර පාර්ශ්ව අතර 32 වැනි රැස්වීමේ තීරණයෙන් අනතුරුව, දැනට සිදුකෙරෙන සාකච්ඡාවල දී ඉහත කරුණ පිළිබඳව ප්‍රධාන අවධානයක් යොමුකොට ඇත. මානුෂීය රාජ්‍යතාන්ත්‍රික කටයුතුවල නිරතවීම සහ මානව දුක් වේදනා ලිහිල් කිරීම  සඳහා මෙය අපගේ සියලු රටවලට වඩා හොඳ සේවාවක් ලබා දෙනු ඇතැයි ද ඔහු පැවසීය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
2019 නොවැම්බර් 12 වැනි දින

------------------------------------

Please follow and like us:

Close