சம்பியாவில் வணிக வாய்ப்புக்களை பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எதிர்பார்ப்பு

சம்பியாவில் வணிக வாய்ப்புக்களை பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எதிர்பார்ப்பு

இலங்கை வணிகங்களுக்கான புதிய வழிகளைக் கண்டறியும் நோக்கில், தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர சம்பியாவின் உயர்ஸ்தானிகரை அண்மையில் சந்தித்தார்.

தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற 09 ஏனைய நாடுகளில் சம்பியாவும் ஒன்றாகும். பிரிட்டோரியாவில் உள்ள சம்பியன் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜக்சன் மிதியுடனான சந்திப்பில், உயர்ஸ்தானிகர் இலங்கைக்கும் சம்பியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை உயர்ஸ்தானிகர் அமரசேகர மீண்டும் வலியுறுத்தினார். மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி ஹகைண்டே ஹிசிலேமாவின் தலைமையில், ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் சம்பியாவுடனான இருதரப்பு உறவுகளைப் புதுப்பிப்பது குறித்து உயர்ஸ்தானிகர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, உயர்ஸ்தானிகர் அமரசேகரவின் வருகைக்காக உயர்ஸ்தானிகர் மிதி நன்றிகளைத் தெரிவித்ததோடு, இலங்கை மற்றும் சம்பியாவிற்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான தனது ஆதரவை உறுதியளித்தார். கலந்துரையாடலில், இரு தரப்பினரும் இலங்கையில் ஆடைத் தொழிலுக்கு (பருத்தி) மூலப்பொருட்களை வழங்குதல், சம்பியாவில் உள்ள தொழிற்பூங்காக்களில் இலங்கை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்கள், கட்டுமானத் தொழில், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் மற்றும் தொழில்முறை சேவைகளில் பங்கேற்றல் போன்ற பல வணிகத் தொடர்புகளைக் கண்டறிந்தனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சம்பியன் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

பிரிட்டோரியா

2021 செப்டம்பர் 09

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close