சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினக் கொண்டாட்டம்

 சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினக் கொண்டாட்டம்

கடந்த 50 ஆண்டுகளில் 30 - 50% சதுப்பு நிலங்கள் இழக்கப்பட்டுள்ளன. புதிய, குறைந்த விலையிலான தொழில்நுட்பங்களிலிருந்து பயனடைதல்  மற்றும் அதிகாரம் பெற்ற ஈடுபாடு மற்றும் புதுமையான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் உள்ளூர் சமூகங்களின் பின்னடைவை ஆதரித்தல் ஆகியவற்றில் நன்மை பயக்கும் முகமாக சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கான புதிய அணுகுமுறைகள் உருவாகின்றன. இலங்கையின் கடற்கரையிலில் அண்மைய எக்ஸ்-பிரஸ் பேர்ள் அனர்த்தத்தினால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, கடலோர சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்கள் பரவலான சாத்தியமான அழுத்தங்களால் பாதிக்கப்படக்கூடியவையாதலால், அவற்றுக்கு நம்பகமான கண்காணிப்பு மற்றும் பதில் திட்டங்கள் தேவைப்படுகின்றன.

54 பொதுநலவாய நாடுகளில் 33 சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்கள் காணப்படுவதுடன், அவை உலகளாவிய  சதுப்பு நிலங்களில் 22% ஐ குறித்து நிற்கின்றது. இலங்கையால் வெற்றிகொள்ளப்பட்ட சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைக் குழு, அதன் உறுப்பினர்களுடன் நடவடிக்கைக்கான முன்னுரிமைகள், நிதியுதவிக்கான புதுமையான வழிகள், பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டைத் தூண்டக்கூடியதாக அமைவதுடன், கொள்கைகளை செயற்படுத்துதல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்காக தரவு நிர்வாகத்தை ஆரம்பித்தல் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

யுனெஸ்கோ அறிவித்த சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினத்தை கொண்டாடும் வெளிநாட்டு  அமைச்சின் இரண்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசன செயற்குழுவின் கூட்டு ஒருங்கிணைப்பாளராக, வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும்  காலநிலை மாற்றப் பிரிவு, பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து 'சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புசதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்களை வரைதலுக்கான பாதுகாப்புக்கான சர்வதேச தினம்' என்ற தலைப்பில்  வெபினார் ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்தத் தலைப்பு சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை 'ஒரு தனித்துவமான, சிறப்பான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றின் நிலையான முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்கான தீர்வுகளை ஊக்குவிக்கின்றது.

செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலகளாவிய சதுப்புநில அமைவு பற்றிய விரிவான படத்தை வரைவதற்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதில் ஆர்வமாக உள்ள பொதுநலவாய அரசாங்க அதிகாரிகளை இந்த வெபினார் இலக்காகக் கொண்டமைந்தது. இந்த அறிவு தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள், நீல கார்பன் உத்திகள்  மற்றும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களுக்கு பங்களிக்க முடியும்.

இந்த வெபினாரில் இடம்பெற்ற பேச்சாளர்களில் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப்  பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க உள்ளடங்கயிருந்ததுடன், சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த செயற்குழுவில் மற்றும் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் போதான இலங்கையின் முக்கிய பங்கு, முக்கிய சாதனைகள் ஆகிவற்றை விளக்கியதுடன், சுற்றுச்சூழல் அமைச்சின் பல்லுயிர் செயலகத்தின் பணிப்பாளர் திருமதி. பத்மா அபேகூன், கொள்கை, வழிகாட்டுதல்கள் மற்றும் செயற்றிட்டம் மற்றும் வரைவு மற்றும் கண்காணிப்புக்கான உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் வரைபடங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட சதுப்புநிலப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பில் இலங்கையின் சாதனைகள் குறித்து கவனம் செலுத்தியதுடன், ட்ரினிடாட் மற்றும் டொபாகோவின் கடல்சார் விவகாரங்களுக்கான புவிசார் ஆய்வு ஆராய்ச்சியாளர் திருமதி நிக்கியா கூடிங், சதுப்பு நிலம் மற்றும் வான்வழி புகைப்படம் எடுத்தல் மற்றும் சதுப்புநிலம் மற்றும் இ.எம்.எஸ்.ஏ. கிரகங்களின் செயற்கைக்கோள் நிறுவனத்தின் மூலோபாயக் கணக்குகளைப் பயன்படுத்துவதிலான தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், குறிப்பாக பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களை வரைவு செய்வதில் நிறுவனம் எவ்வாறு நாடுகளுடன் ஒத்துழைக்கின்றது என்பது குறித்து திரு. மார்க் ரிச்சர்ட்சன் விளக்கினார். பொதுநலவாய செயலகத்தின் நீல சாசனத் திட்ட முன்னணி, சமுத்திர நிர்வாகத்தின் ஆலோசகர் கலாநிதி. ஜெஃப் ஆர்டன் இந்த வெபினாரை நிர்வகித்தார்.

பெரும்பாலும் பொதுநலவாய சகோதரத்துவ அமைப்பு உள்ளடங்கலாக, உலகெங்கிலும் 75 க்கும் மேற்பட்ட  பங்கேற்பாளர்கள் இந்த வெபினாரில் இணைந்து கொண்டனர்.

மேலும், இந்த விஷேட தினத்தை கொண்டாடும் வகையில், வனவிலங்கு பாதுகாப்பு, மின் வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மீள வனப்பகுதிமயமாக்கல் மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ. விமலவீர திஸ்ஸநாயக்க அவர்களின் அனுசரணையில், வனத் திணைக்களத்தினால் கிழக்கு கடற்கரையில் உள்ள 'ஒமரி லகூனில்' சதுப்புநில நடவுப் பிரச்சாரமொன்று ஏற்பாடு  செய்யப்பட்டது. சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் குழுவினர் வெளிநாட்டு அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

ஒரு தனித்துவமான குளமான ஒமரி லகூன், கடல் மட்டத்துடன் நேரடியாக இணைக்கப்படாமையன் காரணமாக  கடல் மட்டம் குறைவாக இருப்பதால், மண்ணின் வழியாக தொடர்ந்தும் உப்புத்தன்மை காணப்படுகின்றது. சதுப்புநிலங்கள் காணப்படுவதனால், உமிழ்வுநீர் உள்நாட்டை அடைந்து கொள்வது தடுக்கப்படுகின்றது. இது சதுப்பு நிலங்களுக்கு அருகில் நெல் அறுவடை இடம்பெற வழிவகுக்கின்றது. மழைக்காலங்களில், மண் அடுக்குகள் வெள்ளத்தில் மூழ்கி, மண் அடுக்குகளில் உள்ள மீன்கள் வெளியே வந்து வேகமாக இனப்பெருக்கம் செய்வதனால், உள்ளூர் சமூகங்களான மீனவர்களுக்கு மற்றொரு வாழ்வாதாரத் தெரிவாக இது அமைகின்றது. வெப்பமண்டலக் காடுகளை விட சதுப்பு நிலங்கள் 3 - 4 மடங்கு அதிகமான கார்பனை வரிசைப்படுத்துகின்றன என்ற விஞ்ஞான உண்மைக்கு மேலதிகமாக, வாழ்வாதாரங்களுக்கு இது நேரடியாக பங்களிப்புச் செயவதனால், நாம் ஏன் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

29 ஜூலை 2021

Please follow and like us:

Close