கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு சிறந்த மற்றும் முன்மாதிரியான தலைவர்

கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு சிறந்த மற்றும் முன்மாதிரியான தலைவர்

மறைந்த கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையில் பிறந்த ஒரு சிறந்த அமைச்சராவார் என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். அவர் ஒரு சிறந்த மற்றும் முன்மாதிரியான தலைவராகவும் இருந்தார் என  அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார். கதிர்காமரின் 16வது நினைவு தினத்தையொட்டி, கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேன் ராகவன், யதாமினி குணவர்தன, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, திருமதி கதிர்காமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

'ஒரு சாதாரணமான மற்றும் எளிமையான நபரான கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர், சர்வதேச விவகாரங்களில் ஆழமான அறிவைக் கொண்ட ஒரு கல்வியாளராகத் திகழந்ததுடன், சர்வதேச சமூகத்தால் மதிக்கப்பட்டார்' என அமைச்சர்  குணவர்தன தெரிவித்தார். இந்த சந்திப்பில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, தாய்நாட்டின் சார்பில் கௌரவ கதிர்காமர் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க முடியாது எனக் குறிப்பிட்டார். தாய்நாட்டை நோக்கிய அவரது கொள்கையை முன்னெடுத்துச் செல்வது எமது கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 13

 

Please follow and like us:

Close