குரோஷியா குடியரசின் தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே, 2022 மார்ச் 03ஆந் திகதி ஜாக்ரெப்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ஜோரன் மிலானோவிக்கிடம் நற்சான்றிதழ்களை கையளித்தார்.
சுருக்கமான பாரம்பரிய நற்சான்றிதழ் உரையை நிகழ்த்திய தூதுவர் உனம்புவே, குரோஷியா ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பொருளாதாரத் துறையில் விஷேட கவனம் செலுத்தி குரோஷியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
தூதுவருக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி மிலானோவிக், தூதுவரின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் குரோஷியா அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை உறுதியளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகளை புதிய ஒத்துழைப்புத் துறைகளாக விரிவுபடுத்த குரோஷியா விரும்புவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சாக்ரெப்பிற்கான பயணத்தின் போது, அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர், பொருளாதார உறவுகளுக்கான திணைக்களத் தலைவர் மற்றும் யூரேசியா மற்றும் ஓசியானியா திணைக்களத் தலைவர் உட்பட தூதுவர் ஜனாதிபதியின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மற்றும் குரோஷியாவின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்தார். இந்த உரையாடல்களின் போது, புதிய ஒத்துழைப்பின் பகுதிகளைப் பார்க்கும் போது, தற்போதுள்ள உறவுகளை புத்துயிர் பெறச் செய்யும் பணியின் உறுதிப்பாட்டை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தூதுவருடன் முதல் செயலாளரும் தூதரகத்தின் அதிபருமான புத்திக விமலசேனவும் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
பேர்லின், ஜேர்மனி
2022 மார்ச் 11