கிண்டாவோவில் உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்விளக்கப் பகுதியின் கூடம் இலங்கைத் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தல்

கிண்டாவோவில் உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்விளக்கப் பகுதியின் கூடம் இலங்கைத் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தல்

2021 அக்டோபர் 27-28  இல் ஜியாவோ, கிங்டாவோவில் நடைபெற்ற 2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிதி ஒத்துழைப்பு மற்றும் மூலதனச் சந்தை அபிவிருத்தி மன்றத்தில் தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன பங்கேற்றார்.

சீனாவுக்கான செயல்விளக்க வலயத்தின் நிர்வாகக் குழு - ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளூர் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் நிதி ஆய்வுகளுக்கான சோங்யாங் நிறுவனம் மற்றும் ஜியாஓசோவு மாநகர மக்கள் அரசாங்கம் ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மன்றம் கிங்டாவ் மாறகர மக்கள் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டது. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தொழில்துறைச் சங்கிலி மற்றும் நிதிச் சந்தைகள் மற்றும் மூலதனச் சந்தைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கிங்டாவோ, ஷாண்டோங் மாகாணம் மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு இடையேயான ஆழமான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியன இந்த மன்றத்தின் குறிக்கோளாக இருந்தன.

மூலதனச் சந்தைகளின் விரிவாக்கம், சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்.எம்.பி. ஐப் பயன்படுத்துதல், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்புப் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றை இந்த மன்றம் ஆராய்ந்தது.

மன்றத்தில் உரையாற்றிய கலாநிதி. கொஹொன, உறுப்பு நாடுகளின் தயாரிப்புக்களுக்கான அதிகமான அணுகல் சீன சந்தைகளில் தேவை என்பதை வலியுறுத்தினார்.

30 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள், இராஜதந்திரத் தூதுவர்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள், மற்றும் சுமார் 20 பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்த மன்றத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்தினர்கள் தமது தயாரிப்புக்களை உலகளாவிய நுகர்வோர் சந்தையில் முன்னிலைப்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஷங்காய் ஒத்துழைப்பு செயல்விளக்கப் பகுதியின் ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்கு கலாநிதி. கொஹொன அழைத்துச் செல்லப்பட்டார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சில உறுப்பினர்கள் ஏற்கனவே தமது கூடங்களை நிறுவியிருந்தனர். எதிர்வரும் மாதங்களுக்குள் இலங்கைக் கூடத்தை நிறைவு செய்வதாக ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர். கிங்டாவோ மிகவும் அபிவிருத்தியடைந்த நகரமாக இருந்த போதிலும், ஐரோப்பாவில் உள்ள நகரங்களுடன் இணைக்கும் ரயில்வே வலையமைப்பு அமைப்புக்களில் ஒன்றாகும்.

ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், கிங்டாவ் மாநகர அரசாங்கத்தின் நிலையிய்குழு உறுப்பினர் திரு. லியு ஜியான்ஜுன் மற்றும் முனிசிபல் கட்சியின் செயலாளர் ஜியாசோவ், கிங்டாவோவின் வெளியுறவுப் பணிப்பாளர் திரு. மௌ ஜுண்டியன் மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்விளக்கப் பகுதியின் நிர்வாகக் குழுவின் அதிகாரிகளை ஆகியோரை கலாநிதி. கொஹொன சந்தித்தார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

 

2021 நவம்பர் 02

Please follow and like us:

Close