காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் அடுத்த நிலையிலான உறவினரிடம் இழப்பீட்டிற்கான காசோலை கையளிப்பு

காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் அடுத்த நிலையிலான உறவினரிடம் இழப்பீட்டிற்கான காசோலை கையளிப்பு

 காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் மனைவியிடம் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன ரூபா. 2,653,125.00 பெறுமதியான காசோலையை 2021.03.16ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.

ஓமான் சுல்தானேற்றில் சைத் பின் சுல்தான் கடற்படைத் தளத்தில் பணிபுரிந்த காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனி, 2020.07.19ஆந் திகதி மாரடைப்பால் காலமானார். காலஞ்சென்றவரின் தொழில் தருனரான ஓமான் பாதுகாப்பு அமைச்சினால் பணிக்கொடை மற்றும் இறப்பு இழப்பீட்டிற்கான இறுதிச் செலுத்துகையாக மேற்படி காசோலை பெற்றுக்கொள்ளப்பட்டது.

காலஞ்சென்றவரின் குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் நல்லுறவு சார்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். காலஞ்சென்ற திரு. மஞ்சுள அந்தனியின் மனைவி வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு மற்றும் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

2021 மார்ச் 18

 

Please follow and like us:

Close